உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அப்பாத்துரையம் - 36

உள்வஞ்சகமுடையவனாயினும் உண்டி தந்த விடத்தில் கலவரம் விளைவிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் கரெய்ன்டும் எனிடும் தம் குதிரைகளைக் கொண்டு வரச் சொல்லி வெளியேறினர். விடுதிக்காரனது கடனுக்கு ஈடாகக் கெரெய்ன்டு குதிரைகளில் மீந்த ஐந்தையும், அவற்றிலுள்ள கவசங்களையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். காலையில் நரி முகத்தில் விழித்தோம் என்ற மகிழ்ச்சியுடன் விடுதியாளன் அவர்களை விடை கொடுத்தனுப்பினான்.

காடுகளுக்குள் நுழைந்ததும் கெரெய்ன்டு மனம் மீண்டும் கடுமையடைந்தது. “என்னை நீ காப்பாற்ற முயல வேண்டாம். இனி எக்காரணங் கொண்டும் என்னிடம் பேசவும் வேண்டாம். எனக்கு உன் எச்சரிக்கைகளில்லாமலே என்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும். நீ நினைப்பது போல நான் பேடியல்ல,” என்றான்.

அவன் பேடியென்று தான் நினைக்கவில்லையானாலும், பிறர் அவ்வாறு சொல்லுகிறார்களே என்று கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது.

அவர்கள் அடுத்தபடி நுழைந்த பகுதி டெவனிலேயே எவரும் அணுகத் துணியாத இடம். அது டூர்ம்2 என்ற பெருஞ் செல்வனுக்குரியது. அவனிடம் குடி, சூது, வஞ்சகம், பெண்பழி ஆகிய எல்லாத் தீக் குணங்களும் குடி கொண்டிருந்தன.பிரிட்டன் எங்கும் செங்கோலால் அறம் வளர்த்த ஆர்தருக் கெதிராக டெவனெங்கும் தன் கொடுங்கோலால் மறம் வளர்த்த கொடியோன் அவன்.

இத்தகைய கொடிய நாட்டில் எந்நொடியில் பகைவர்கள் வருவார்களோ என்ற எச்சரிக்கையுடன் சென்றாள் எனிட். எனவே, கெரெய்ன்டு கேளாத குதிரைக் காலடி ஓசை அவளுக்குக் கேட்கவே திரும்பிப் பார்த்தாள். மூன்று குதிரை வீரர் குதிரை நுரை தள்ளும்படி ஓடி வருவதையும், முன் வந்தவன் அண்டி விட்டதையும் அவள் கண்டாள். அவன் லெமூர்ஸே என்றும் அவளே ஒரே நொடியில் கண்டு கொண்டாள்.

கணவன் ஆணையை நினைத்து அவள் வாய் திறவாமலே பின்புறம் நோக்கிக் கையைக் காட்டினாள். கெரெய்ன்டு