உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(84) ||-

அப்பாத்துரையம் - 37

என்பதைப் பொருட்படுத்திலர். அரசன் ரீகன் அரண்மனைக்கு வந்தவுடன் முதலில் கண்ட காட்சி, தன் நன்றியுள்ள ஏவலாள் இழிநிலையுற்றுத் தொழுவிலிருத்த லேயாயிற்று.

லியர் எதிர்பார்த்த வரவேற்பிற்கு இஃது ஒரு தீயநிமித்தம். இதனினும் தீயது மற்றொன்று நேர்ந்தது. அவன் தன் மகளையும் மருமகனையும் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இரவெல்லாம் செய்த பிரயாணத்தால் களைப்புற்றதால் அரசனைப் பார்த்துப் பேச இயலாமல் இருப்பதாக ஏவலாளர் தெரிவித்தனர். இறுதியில் எவ்வாறேனும் அவர்களைத் தான் பார்த்துப் பேசவேண்டும் என்று சினங்கொண்டு வற்புறுத்தியபோது, அவர்கள் வரவேற்க வந்தனர். அப்போது அவர்களுடன் கானெரிலும் இருக்கக் கண்டான் லியர் மன்னன். தன் கதையை நேரில் சொல்லத் தந்தைக்கு மாறாகத் தங்கை மனத்தைத் திருப்பவேண்டும் என்றே கானெரில் அங்கு வந்திருந்தாள்.

லியர் கண்ட காட்சி அவன் மனத்தை வருத்தியது. ரீகன் தன் தமக்கையின் கையைப் பற்றிக்கொண்டு அளவளாவுதலைக் காண வருத்தம் மிகுந்தது. “கானெரில்! என் நரைத்த தாடியைப் பார்க்க உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று லியர் தன் மூத்த மகளைக் கேட்டான்.

“தந்தையே! தமக்கையின் அரண்மனைக்கு மீண்டு செல்வதே நல்லது. அங்கு அமைதியாக வாழ்ந்திருப்பீராக! உம் வீரரில் பகுதியினரை நீக்கிவிடுக. தமக்கையினிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும். உமக்கோ ஆண்டு நிரம்பிவிட்டது. நன்மை தீமை பகுத்தறிதல் இம்முதுமையில் இயலாது. வல்லார் பிறர் வகுக்கும் வழியில் நடத்தலே நலம்,” என்று ரீகன் அறிவுரை கூறத் தொடங்கினாள்.

லியர் உடனே அவளை நோக்கி, "நான் என் மகளிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டு உணவும் உடையும் இரந்து பெற்று வாழ்தல் எத்துணை அறியாமை! மானக் குறைவு! நான் மீண்டும் அவள் அரண்மனைக்குச் செல்லேன்; இஃது என் உறுதி. உன்னிடத்திலேயே நானும் என் வீரர் நூற்றுவரும் இருப்போம். என் நாட்டின் அரைப் பகுதியை நீ என்னிடம் பெற்றதை மறந்து விடவில்லையே? உன் பார்வை கானெரில் நோக்குப் போலக் கொடியதன்று; அன்பும் இரக்கமும் உடையது என நம்புகிறேன்.