உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

107

கொடுஞ் செயலே; ஆயினும், ஓர் அரசனைக் கொன்று அவன் தம்பியை மணந்த உமது கொடுஞ் செயலைப் போன்ற அவ்வளவு கொடுமையானது அன்று," என்றான் ஹாம்லெத். அவன் அவ்வளவில் நின்றானில்லை. தன் உள்ளத்தில் உள்ள எல்லா வற்றையும் வெளிப்படையாகக் கூறிவிடத் துணிந்தான். பெற்றோருடைய குற்றங்களை மக்கள் மறந்து விடுதலே கடமை; ஆயினும், செய்யத் தகாத பெருங்குற்றங்களைப் பெற்ற தாய் செய்வாளானால், கண்ணோட்டமின்றிக் கண்டித்துச் சொல்லும் உரிமை மகனுக்கு உண்டு அன்றோ? அவ்வாறு கண்டித்துச் சொல்வது அத்தாயை மேன்மேலும் வருத்துவதற்காக அல்லாமல், தீய வழியிலிருந்து அவளைத் திருப்பி அவளுக்கு நன்மை செய்வதாய் இருத்தல் வேண்டும்.

“தாயே! என் சொல்லைக் கேட்டு மனம் இரங்குவீராக. இறந்த அரசராகிய என் தந்தையை இரண்டு திங்களுக்குள் மறந்தீர். அவரைக் கொன்ற கொலைஞனாகிய அவர் தம்பியை மணந்தீர். என் தந்தையை மணந்த காலத்தில் நீர் செய்த வாக்குறுதிகள் என்ன ஆயின? இனி, பெண்பாலார் செய்யும் வாக்குறுதிகளை உலகம் நம்புவது எங்ஙனம்? பெண்டிரிடம் உள்ள நற்பண்புகள் யாவும் மாயமே என்பதை உம்முடைய ஒழுக்கம் காட்டவல்லது அன்றோ? திருமணக் காலத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் நடக்கும் ஒப்பந்தம் சூதாடுவோர் சூளுறுதலுக்கு ஒப்பானதாக ஆகிறதே! சமயநெறி என்பது கேலிக் கூத்தாகவும் வெறுஞ் சொற்களின் கோவையாகவும் புலப் படலாயிற்றே! அன்னாய்! நீர் செய்த செயல் எத்தகையது? ஆ! அதைக் கண்டு விண்ணோர் வெட்கமுற்றனர்; மண்ணோர் மனம் நொந்தனர். (இவ்வாறு சொல்லிக் கொண்டே ஹாம்லெத் இரண்டு படங்களை எடுத்துக் காட்டினான். அவற்றுள், ஒன்று றந்த மன்னன் படம்; மற்றொன்று அவனைக் கொன்ற கிளாடியஸ் படம்.) இந்தப் படங்கள் இரண்டிற்கும் உள்ள வேற்றுமையைப் பாரும். என் தந்தையின் முகக்களை என்னே! தெய்வம் போலத் தோற்றம் அளிக்கிறார்! இவரே உம்முடைய கணவராக இருந்தவர். இதோ இந்தப் படத்தில் காண்பவனோ அவர் இறந்தபின் நீர் விரும்பி மணந்த கயவன்; அழகனாகிய தன் தமையனைக் கொன்ற பாவியின் முகத்தைப் பாரும்!” என்று