உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

109

வேண்டினான். அவ்வாறே வாழ்வதாக அரசி வாக்களித்ததும் பேச்சு முடிந்தது.

பிறகு ஆய்ந்தோய்ந்து பாராமல் திரைமறைவில் இருந்தவனைத் தான் கொன்றதை நினைத்துக் கொண்டான் ஹாம்லெத், கொல்லப்பட்டவன் தன் அருமைக் காதலி ஒபீலியாவின் தந்தையாகிய பொலோனியஸே என்பதை ஹாம்லெத் அறிந்து, அவன் உடலை ஒரு புறத்தில் ஒதுக்கி, பதைப்பும் சினமும் ஆறி, தன் செயலை நினைந்து வருந்தினான். காட்டி,

பொலோனியஸ் இறந்ததைக் காரணம்

ஹாம்லெத்தை நாடு கடத்த வேண்டும் என்று அரசன் கட்டளை யிட்டான். ஹாம்லெத் தனக்குத் தீங்கு செய்யக்கூடுமென்று அரசன் அஞ்சினான்; அதனால் அவனைக் கொன்றுவிடவும் துணிந்திருப்பான். ஆனால் தன் குடிகள் அவன்மீதும் அரசிமீதும் அன்பு கொண்டிருப்பதால், குடிகளுக்கு அஞ்சி அவனைக் கொல்லாமல் விட்டான். அன்றியும், அரசி ஹாம்லெத்தைத் தன் அன்பிற்குரிய மகனாய்ப் போற்றுதலையும் அவன் அறிந்திருந்தான். ஆகையால், அமைச்சனைக் கொன்ற ஹாம்லெத் எப்படியாவது தப்பிப் பிழைக்க வேண்டுமென்று அன்புடையவன் போலக் கூறி அவனைக் கப்பலில் ஏற்றி இங்கிலாந்திற்கு அனுப்பினான்; அவனுடன் அரண்மனைக் காவலர் இருவர் செல்லுமாறு ஏவினான்; ஹாம்லெத் வந்து கரைசேர்ந்தவுடன் அவனைக் கொன்று விடுமாறு இங்கிலாந்து அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அதனைக் காவலரிடம் கொடுத்தனுப்பினான். (அக்காலத்தில் இங்கிலாந்து அரசன் டென்மார்க்கு அரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திறை கொடுத்து வந்தான்.)

அரசன் வஞ்சகமாய் ஏதேனும் சூழ்ச்சி செய்திருப்பான் என்று ஹாம்லெத் ஐயுற்றான். அன்றிரவு காவலர் தூங்கிக் கொண்டிருந்த போது, அக்கடிதத்தை எடுத்துப் பிரித்துத் தன் பெயரை அழித்துக் காவலர் இருவர் பெயரையும் அதற்குப் பதிலாக எழுதிவிட்டு மீண்டும் முத்திரை செய்து இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான். சிறிது நேரத்திற்குள் கடற்கள்வர் சிலர் கப்பலைத் தாக்கினர். கள்வர்க்கும் கப்பலில் இருந்தவர்க்கும் போர் நடந்தது. அப்போரில் ஹாம்லெத் தன் ஆண்மையைக் காட்டி வாள்கொண்டு எழுந்து கள்வர் இருந்த