உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

123

பற்றுக்கொண்டிருப்பது தெரிந்து அவளிடம் அவனுக்கு நல்லெண்ணம் உண்டாயிற்று. எனவே தனது மாய மலர் மூலம் அவளுக்கும் நலம் செய்ய எண்ணங் கொண்டான். பக் அம்மலரைக்கொண்டு வந்ததும் அவன் பக்கினிடம், “இம்மலரின் ஒரு பகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன். இன்னொரு பகுதியை நீ கொண்டுபோ. அதேனிய இளைஞனொருவனும் மங்கை ஒருத்தியும் இக்காட்டில் செல்கின்றனர். அவர்களைச் சரியாக அடையாளங் கண்டு, மங்கையைக் காதலிக்கும்படி இளைஞன் கண்ணில் மாய மலர்ச் சாற்றைப் பிழிவாயாக" என்றான்.பக் அங்ஙனமே செய்வதாகக் கூறி அகன்றான்.

அதன்பின் ஓபிரான், திதானியா அறியாது அவள் தங்கும் மலர்ப் படுக்கையை அணுகினான். அங்கு மல்லிகை முல்லை, சண்பகம் முதலிய நறுமலர்கள் பூத்துக் கிடந்தன. திதானியா ஒரு மலரணை மீது பாம்பின் தோலை ஆடையாக உடுத்துக்கொண்டு வீற்றிருந்தாள். அவளுடைய தோழியராகிய வனதெய்வங்கள் அவள் பணியைத் தலைமேற்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் மல்லிகை மொட்டுக்களைத் தின்னும் புழுக்களைக் கொல்லும் வேலையிலீடுபட்டிருந்தனர்; சிலர் வௌவால்களுடன் போர் புரிந்தனர். இப்போர்களிற் கொன்ற வௌவால்களின் தோலினாலேதான் வனதெய்வங்கள் ஆறுகளைக் கடக்கும் படகுகளைச் செய்துவந்தனர். சிலர் அருவருக்கத்தக்க குரலும் உருவும் உடைய ஆந்தைகள் வந்து வனஅரசிக்கு ஊறுசெய்யாமற் காவலிருந்தனர். இன்னும் சிலர் வனஅரசி உறங்கும் வண்ணம் அவளுக்குத் தாலாட்டுப்பாட்டுப் பாடினர்.

(பாட்டு)

முதல் வனதெய்வம்

வகிர்ந்த நாவும் புள்ளியுங் கொண்ட வன்கட் பாம்பீர்! வாராதீர்!

பகர்ந்த பல்லியீர்! பதுங்கு நாங்கூழ்ப்

புழுவீர்! அரசியைப் பாராதீர்!

(பல்லவி)