உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

131

பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனை விரைவில் அனுப்பிவிட்டுத் தன் காதலனுடன் தடையின்றி இருக்க விருப்பங் கொண்டாள். ஆகவே, அவன் கேட்டபடி தன் சிறிய இந்தியப் பையனை அவனுக்குக் கொடுத்துவிட்டாள்.

5. முடிவு

தன் காரியம் கைகூடின பின் திதானியா கழுதையுடன் கிடந்து உறங்குவதைக் கண்டு ஓபிரானுக்கு இரக்கம் வந்தது. ஆகவே அவன் அவள் கண்களில் மாற்று மலரின் சாற்றைப் பிழிந்தான். அவள் விழித்தெழுந்ததும் தனது பொய்க்காதலை மறந்து ஓபிரானிடமே தன்னியற்கைப்படி

கொள்ளலானாள்.

காதல்

அதே சமயத்தில் காதலர்கள் குழப்பமும் ஒருவாறு தீர்ந்தது. பக் மற்போருக்கு முனைந்த காதலர்களை அவர்கள் எதிரிகளின் குரலில் தனித்தனி அழைத்துச் சென்று பிரித்தான். பின் அவர்கள் பலவிடங்களிலும் சென்று களைப்படைந்தனர். காதலியரும் அதேபோன்று அலைந்து களைப்படைந்தனர்.அனைவரும் பக்கின் சூழ்ச்சித் திறத்தின் பயனாகக் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வந்து படுத்துறங்கினர். அப்போது பக் லைஸாண்டர் கண்களில் மாற்றுமலரின் சாற்றைப் பிழிந்தான்.

அவர்கள் எழுந்தபோது தெமத்ரியஸ் ஹெலனாவின் காதலை மறவாது அவளைப் புகழ்ந்தான். அவளும் மயக்கந்தெளிந்து தன் விருப்பங் கைகூடியதென மகிழ்ந்தாள். அதே நேரத்தில் லைஸாண்டர் விழித்தபோது அவனை மயக்கிய மாயமலரின் ஆற்றல் மாற்று மலரால் அகன்றுவிட்டது. அவன் பழையபடி ஹெர்மியாவிடம் இன்மொழிகள் கூறினான். அவளும் தான் பட்ட துன்பமனத்தையும் கனவென உணர்ந்து மகிழ்ந்தாள். தோழியர் இருவரும் இப்போது காதற்சுழலிலிருந்து விடுபட்டு விட்டனர். இருவரும் தத்தங் காதலரைப் பெற்ற மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.

நகரத்தில் மன்னன், தீஸியஸுக்கும், ஹிப்பாலிதாவுக்கும் மணவினை நிகழ்த்த எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறின. மறுநாள் மணநாள். அவ்விரவு, அரசனுக்கும் அவன் காதல் துணைவிக்கும் மிக நீண்டதாகத் தோன்றிற்று. ஆதலால், அதனைக் களிப்பு