உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(136) ||__

அப்பாத்துரையம் – 37

நண்பனுக்கெழுதி, அவளைக் கொல்லத் தூண்ட, அவன் செய்தியைக் கூறிவிட்டு அவளை விட்டுச் சென்றான். அப்போது அவன் இமொஜெனைக் கொல்ல எண்ணி நஞ்சொன்று மருத்துவனிடம் வாங்கி மருந்தென்று சொல்லிக் கொடுத்த மயக்க மருந்தையும் அவளிடம் கொடுத்தான். இமொஜென் அதனுடன் தற்செயலாக கிடரியஸ் அர்விராக்ஸை அடுத்து உடன் பிறந்தார் என்றறியாமல் அவர்களை உடன் பிறந்தாராக நடத்தினாள். பின்னொரு நாள் அயர்வால் அம்மருந்து கொண்டிறந்தாற்போற் கிடக்க, சிறுவர் பூப்பெய்து உடலை அடக்கஞ் செய்து போக அவள் பின் எழுந்து சென்றாள்.

இச்சமயம் ரோமர் படையெடுக்க, பாஸ்துமஸ், பெலாரியஸ், சிறுவர் முயற்சியால் ரோமர் முறியடிக்கப் பட்டார்கள். ஆண் வடிவுள்ள இமொஜென் ரோமனாகிய லூஸியஸால் ஆதரிக்கப்பெற்று அவனுடன் சிறைப்பட்டாள். பாஸ்துமஸ் உயிர் வெறுத்து ரோமனாக நடித்துச் சிறைப்பட்டான். இமொஜென் கணவனைக் கண்டதுடன் அயாக்கிமோவிடம் தன் கணையாழி கண்டு, தன்மீது இராங்கிய அரசனிடம் வேண்டி அவனை ஒறுத்து உண்மை விளக்கித் தன் உருக்காட்டி எல்லோரையும் மகிழ்விக்கின்றாள்.

1. காதலர் பிரிவு

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிரிட்டனில் (அஃதாவது இங்கிலாந்தில்)' ஸிம்பலின்என்றோர் அரசன் இருந்தான். அவனுடைய முதல் மனைவி இறந்தபின் அவன் மீண்டும் மணம் செய்து கொண்டான். முதல் மனைவி மூலமாக அவனுக்குப் புதல்வி ஒருத்தியும் புதல்வர் இருவரும் இருந்தனர். இரண்டாம் மனைவி பேராசையுடையவள். அவள் எப்படியாவது அரசுரிமையைத் தன் வசப்படுத்த நினைத்தாள். முதல் மனைவியின் புதல்வர் இருவரும்

சிறு

பிள்ளைகளாயிருக்கும்போதே எங்கோ காணாமல் மறைந்து போய்விட்டனர். முதல் மனைவியின் புதல்வி அழகிலும் அறிவிலும் மிக்க இமொஜென்2. அவளைத் தன் புதல்வனான கிளாட்டெனு'க்கு மணஞ் செய்து வைத்துவிட்டால் அவள் அரசுரிமை மூலமாக அவனுக்கே வரும் என அரசி எண்ணினாள்.