உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

அப்பாத்துரையம் – 37

2. ஒரு புதுமையான பந்தயம்

ரோமில் பல நாடுகளிலிருந்தும் வந்த இளஞ் செல்வர் பலர் இருந்தனர். அவர்கள் கூட்டத்தில் சேர்ந்து பாஸ்துமஸ் வாழ்ந்து வந்தான். அவர்களது ஆரவார வாழ்வில் பாஸ்துமஸ் தன் மனத்துயரை ஒருவாறு அகற்ற முயன்று கொண்டிருந்தான். ஒருநாள் அவர்கள் பேச்சு தற்செயலாகப் பெண்கள் பக்கம் திரும்பியது. முதலில் ஒவ்வொருவரும் தத்தம் நாட்டுப் பெண்களே உயர்வுடையவர் என்று நிலைநாட்ட முயன்றனர். அதிலிருந்து படிப்படியாகப் பேச்சு முன்னேறி ஒவ்வொருவரும் அவரவர் மனைவி அல்லது காதலியைப் போற்றும் அளவிற்கு வந்தது. பாஸ்துமஸும் அவர்கள் பேச்சிற் கலந்துகொண்டு தன் நாட்டு மாதர்களைச் சிறப்பாகத் தன்னுடைய காதல் தலைவி இமொஜெனையும் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசினான்.

அப்போது அயாக்கிமோ என்ற செல்வன் ஒருவன் இடையில் வந்து, “பெண்களிடம் எங்குமே உண்மைக் கற்பு என்பது கிடையாது. கற்புடையவர் என்பவரின் கற்பெல்லாம் இயலாக் கற்பேயன்றி வேறன்று. முயல்வார் முயன்றால் எம்மாதும் கற்பை விட்டுக் கொடுத்தே தீருவாள்” என்றாள். இது கேட்டுப் பாஸ்துமஸ் சினங்கொண்டு அவ்வுரையை மறுத்தான். “தான் கள்ளன் பிறரை நம்பான்” என்ற பழமொழிக்கிணங்க அவன் அதையே பிடி முரண்டாகக் கூறினான். மேலும் தான் கூறியதை நிலைநாட்டப் பதினாயிரம் பொன் பந்தயம் வைப்பதாகவும் உறுதி கூறினான்.

பேச்சில் மிக முனைந்துவிட்டதாலும், தன் மனைவியின் கற்பில் மாறா உறுதி இருந்ததாலும்,(ஊழ்வினை முந்துறுத்தலாலும்) பாஸ்துமஸ் இப் பந்தயத்தை ஏற்றான்.

என

இம்முயற்சியில் இறங்க உதவும் முறையில் பாஸ்துமஸ் அயாக்கிமோவிடம் தன் கணையாழியைக் கொடுத்து, இமொஜெனுக்கு அயாக்கிமோவை ஒரு நண்பன் அறிமுகப்படுத்தி ஒரு கடிதம் வரைந்து கொடுத்தான். இவற்றைப் பெற்றுக்கொண்டு அவன் பிரிட்டனை நோக்கிப் பயணமானான். இமொஜென் கைவளையையும் காதலையும் பெற்று வந்து விடுவதாக அவன் வீம்பு பேசிக்கொண்டு சென்றான்.