உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

141

அயாக்கிமோ தன் பொய்யுரைகளைத் துணிகரமாக அளந்தான். 'நான் சென்றேன்; சென்று பார்த்தேன்; பார்த்து வென்றேன்' என்று வீம்புடன் கூறிய ஸீஸர் மொழிகளை ஒத்தன அவன் மொழிகள். 'இமொஜென் என்னை நன்கு வரவேற்றாள். முதலில் அவளுடனும் அவள் தோழியருடனும் நயமாக நடந்து கொண்டேன்.பின் தோழியரைப் பல வழியில் வசப்படுத்தினேன். அவர்கள் உதவியாலும் ஒத்துழைப்பாலும் இமொஜெனுடன் நெருங்கிப் பழக முடிந்தது. இறுதியில் இமொஜென் என் வழிக்கு வந்தாள். பல வகையிலும் அவளுடன் பொழுது போக்கினேன். ஓரிரவு படுக்கையறையிலேயே கழித்தேன். பின் பல உறுதி மொழிகளுடன் பிரிந்தேன்" என்றான்.

தோழர் ஒருவரை ஒருவர் நோக்கினர். பாஸ்துமஸ் பின்னும் புன்சிரிப்புடன் 'அத்தனையும் வெறும் கட்டுக்கதை' என்றான்.

அயாக்கிமோ; 'சரி அப்படியே இருக்கட்டும். அவள் படுக்கையறை வெண் பொன் கரையிட்ட பட்டு மேற்கட்டி யுடையது. அதில் தீட்டப்பெற்ற படம் ஒப்பற்ற அரசியான 'கிளியோப்பாத்ரா தன் தலைவன் 7அந்தோனியாவைக் கண்ணுறும் காட்சி; ஆம்' என்றான்.

'அஃது உண்மையே; ஆனால் இதனை நீ பார்க்காமலே கேட்டறிந்திருக்கக் கூடும்' என்றான் பாஸ்துமஸ்.

"புகைபோக்கி, அறையின் தென்புறம் உள்ளது. அப்பக்கம் உள்ள படம் ‘திங்களஞ் செல்வி' (Diana) குளிப்பது ஆகும்."

"இதுவும் கேட்டறியக்கூடியதே."

அதன்பின் அயாக்கிமோ அறையின் முகட்டையும் தணலடுப்பின் முன் தட்டில் கண்ட இரண்டு வெள்ளிக் காமனுருவங்களையும் குறிப்பிட்டான். 'இவையனைத்தும் நீ பணியாட்களிடமிருந்து உசாவி அறிந்திருப்பாய்' என்றான்

பாஸ்துமஸ்.

“சரி; இதனை நீ நன்றாய் அறிந்திருக்கலாமே!” என்று பொன் வளையைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து முன்வைத்தான்.பின், "நான் அவளிடமிருந்து பிரியும்போது அவள் பல உறுதி மொழிகள் கூறினாள். அதன்பின் நான் நினைவுக்குறியாக