உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

145

கொப்பளித்தன. பசியும் நீர் விடாயும் காதடைத்தன. இக்குகையினருகில் மனித வாழ்க்கைக்கான அறிகுறிகள் கண்டு, உணவு இருக்குமா என்று பார்க்க உள் நுழைந்தாள். உள்ளே ஆளில்லை. ஆனால், ஒருபுறம் பழ அமுது வைக்கப் பட்டிருந்தது. பசிக் கொடுமையால் பொறுமையிழந்து முன்பின் எதுவும் நினையாது அதனை உண்ணலானாள். உண்ணும்போதும், தன் நிலை தன் கணவனது கொடுமை இவற்றைப் பற்றிய நினைவு அவள் மனதைவிட்டு அகலாதிருந்தது.

ம்

உடன்பிறந்தார் இருவருக்கும் முதலில் 1°கிடரியஸ், "அர்விராகஸ் என்று பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பலாரியஸ் அப்பெயர்களை மறைத்து அவர்களுக்கு, 12பாலிடோர், 13காட்வேல் என்னும் வேறு பெயர்களை வழங்கினான். அவர்கள் காட்டில் வளர்ந்தபோதிலும், பெலாரியஸ் அவர்களுக்கு எல்லாவகைக் கல்வியும் கற்றுக் கொடுத்தான். அரசிளங்குமரரது இயற்கைப்படி அவர்களும் வாட்போர், மற்போர், வேட்டை முதலிய அரசுரிமைக் கேளிக்கைகளிற் பயின்று வீரமிக்க இளைஞராயினர்.

குகைக்குள் அவ் இளைஞர் நுழைந்ததும், உணவின் முன் குனிந்து உட்கார்ந்திருந்த ஆண் உடை அணிந்த இமொ ஜனைக் கண்டனர். கண்டு, 'இஃதென்ன! பொற்பாவையோ! பொன்னுலகத்தணங்கோ!" எனத் திகைத்து நின்றனர். அதனிடையே இமொஜெனும் அவர்களைக் கண்டதும் தான் அவர்களை எதிர்பாராது அவர்களது இடத்தில் உரிமையுடன் புகுந்தது பற்றி அவர்கள் சீற்றங் கொள்வாரோ என அஞ்சினாள். 'ஐயன்மீர்! மன்னிக்கவும்; பசி மிகுதியால் உங்கள் வரவுக்குப் பொறுக்காமல் உணவை உட்கொள்ளலானேன். ஆனால், அதனைத் திருடும் நோக்கம் எனக்கில்லை. அதற்கான விலையை இங்கு வைத்துவிட்டு உங்களுக்கு நன்றி கூறிப்போகவே இருந்தேன்' என்று சொல்லிக் கொண்டு று அவர்களுக்குப் பொருள் தரப்போனாள். அவர்கள் அதனை மறுத்தனர்.

பெலாரியஸ்: நீ யார்? எவ்விடத்திற்குப் புறப்பட்டு

வந்தாய்?