உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186) ||-

அப்பாத்துரையம் – 37

அவனது கொடிய கருத்து வெளிப்பட்டது. அடுத்த நொடியில் அவன் உரைகளும் அதனைத் தெளிவுப்படுத்தின. ‘உனது இறுதி வணக்கத்தை இறைவனுக்குத் தெரிவித்துக் கொள். உன் உடலைக் கொன்றாலும் உன் உயிர்நலனைக் கொல்ல நான் விரும்பவில்லை' என்றான் அவன். அப்போதுதான் (முன் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!) அவள் அவன் சினத்தின் காரணம் கேட்டாள். விளக்கிக் காரணக் காரியங்களை ஆராயும் நேரமா அது! அவன் தொடர்பற்ற பிதற்றுதலிடையே ‘கைக்குட்டை’ 'காசியோ' என்ற மொழிகள் மட்டுமே அவள் செவியின் உட்புலனிடையே பட்டன. அதற்குள் ஒதல்லோ, குருதியின் ஒரு சொட்டுக்கூடச் சிந்தாது அவளைக் கொல்வேன் என்று கருதிப் படுக்கையிற் கிடந்த தலையணைகளை அவள்மீது அடுக்கி அவற்றாலேயே அவளை அழுத்தித் திணற வைத்து உயிரை மாய்த்தான்.

8. புயலுக்குப் பின்

இதற்குள் அயாகோவின் கையாள் ஒருவனால் காசியோ உடலெங்கும் குத்துண்டு ஒதெல்லோ முன் குற்றுயிருடன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். தன் உள்ளுரைகளைக் காக்க எத்தகைய தீச்செயலுக்கும் அஞ்சாத அயாகோ காசியோவைக் கொல்ல ஏவிய ஆளையும் கொன்றுவிட்டான். ஆனால், அவன் சட்டைப் பையில் கிடைத்த கடிதங்களால் காசியோவின் தூய்மையும் அயாகோவின் பழிச்செயல்களும் காவலருக்கு வெளிப்பட்டன. இவற்றைக்கேட்ட ஓதெல்லோ இடியுண்ட நாகம்போல் அறிவிழந்து விழித்தான். தன் மனைவியின் உயர்வையும் தன் அறியாமையின் தடிப்பையும் உணர்ந்து அவன் உயிர் நிலை மின்னலால் கருகியது போல் கருகிற்று. இனித் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தனக்கு மீளாநரகினும் கொடிதாம் என உணர்ந்து அவன் தன் வாள் மீது வீழ்ந்து மடிந்தான்.

டெஸ்டிமோனாவின் மாசற்ற கற்பையும், ஓதெல்லோவின் உயர்வையும் வெனிஸ் மக்கள் அனைவரும் கண்களில் நீர் சொரியப் போற்றி, அவர்கள் வாழ்க்கையை அழித்த கொடியோனாகிய அயாகோவைத் தூக்கிலிட்டனர்