உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

2. மலர்கள் நறிய மலர்களை

வந்தென் பாடையில் தூவலீர் பலரும் நண்பர் என்னவே

பண்பின் எலும்பு பொறுக்கலீர் கலந்து நூறுபேர் அழல்

கருதிலேன், ஆ. கருதிலேன்!

மெலிந்த காத லார்கணீர்

விழைந்திலேன்! ஆ, விழைந்திலேன்.

துயர்மிக்க இவ்வுருக்கமான

201

காதலாலுடைந்த உள்ளத்தின் நிலைமையை எடுத்துரைக்கும் பாடல் வயோலாவின் உளநிலைக்கும் ஒத்ததாகவே இருந்தது. அதன் துயர் அவள் உள்ளத்திற் புகுந்து முகம் வழிய வெளிப்படக் கண்ட ஆர்ஸினோ, “என் அரிய ஸெஸாரியோ, நீ பிறர் காதலையன்றி நேரடியாகவே காதலை உணர்ந்தவனல்லையோ?” என்றான்.

வயோலா: மன்னிக்கவும் அரசே! அமிழ்தினும் இனிதாய் நஞ்சுபோல் கெடுக்கும் அக்கனியின் சுவையை நானும் சற்று அறிந்துள்ளேன்.

ஆர்ஸினோ: நீ காதலித்த பெண் எப்படிப்பட்டவள்? அவள் ஆண்டு எவ்வளவு இருக்கும்?

வயோலா: அவள் தங்கள் உயரம், தங்கள் சாயலாகவே இருப்பாள். அவள் ஆண்டும் தங்கள் அளவே இருக்கும்.

வயோலாவின் உருவிற் கரந்திருந்த உள்ளுறை உண்மையை அறியாத ஆர்ஸினோ இதுகேட்டு, 'இச்சிறிய இளைஞ னெங்கே, என்னளவு வளர்ந்த மாதெங்கே-என்னளவு ஆண்டில் ஒரு மாது பேரிளம் பெண்ணாக அன்றோ இருப்பாள்' என எண்ணங்கொண்டு வியப்பு ஒருபுறமும், நகைப்பு ஒருபுறமுங் கொண்டான்.

தான் ஆர்ஸினோ போன்ற பெண்ணைக் காதலித்ததாக வயோலா கூறியபோது, அவள் உண்மையில் மனத்துக் கொண்டது தான் பெண், தான் காதலித்த ஆடவன் ஆர்ஸினோ என்பதேயாம்.