உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

(245

யாயிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கப்பியூலத்துக் களின் விருந்தில் அழகிகள் பலரும் வருவார்களாதலால் அவர்களைக் கண்டு ரோமியோ ரோஸாலினின் கவர்ச்சியினின்று விடுபடக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். ஆகவே, அவ் விருந்துக்கு அவனுடன் போவதென அவர்களும் தீர்மானித்தனர். எதிரிகள் தம்மை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி அவர்கள் அனைவரும் முகமூடியுட செல்வதென்றும் முடிவு செய்யப்பட்டது.

ன்

முகமூடியணிந்து விருந்துகளுக்கும் நடனங்களுக்கும் செல்வதும், ஒருவரை ஒருவர் தெளிவாக அறியாமலேயே உறவாடிக் கலந்து காதல் நாடகம் நடிப்பதும் அந்நாட்டில் அக்காலத்தில் வழங்கி வந்த வழக்கங்கள் ஆகும். ஆகவே, அவர்கள் முகமூடியணிந்து வந்ததைப் பற்றி எவரும் தவறாக எதுவும் எண்ணவில்லை. ஆனால், அவர்கள் இன்னார் என்றறிய முடியாவிடினும், நடை உடை தோற்றங்களால் அவர்கள் இளைஞர்கள் என்றும், உயர்குடிச் செல்வர்கள் என்றும் எளிதில் உணரமுடிந்தது. அதனால் அவர்களைக் கப்பியூலத்துப் பெருமகனாரே நேரில் வந்து எதிர்கொண்டு அழைத்தார். அவர் ண்டில் முதிர்ந்தவராயினும் அன்புகனிந்த உள்ளமும் ளைஞர்களும் வியக்கும் ஊக்கமும் உடையவர். எனவே, அவர்களுடன் இன்மொழிகள் கூறி அளவளாவலாயினார்.

ரோமியோவின் நண்பர்கள் எதிர்பார்த்தபடியே வெரோணா நகரத்திலுள்ள வடிவழகிகள் அவ்விருந்தில் நடந்த ஆடல் பாடல்களில் கலந்து கொண்டனர். அழகுக்கலை வல்லுநர் பாராட்டும் பல்வகை அழகுகளும் உருவெடுத்து நேரில் வந்தனவோ என்னும்படி அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வகையில் ஒப்புயர்வற்ற அழகிகளாகவே விளங்கினர். பலவகை மலர்கள் ஒரே கொம்பில் வந்து சேர்ந்தாற்போல ஒரே இடத்தில் வந்து குழுமிய இத்தனை அழகிகளை ரோமியோ பார்த்ததே கிடையாது. கால்கள் பாவுகின்றனவோ அல்லவோ என்று ஐயுறும் வண்ணம் நீரில் மிதக்கும் அன்னங்கள்போல அவர்கள் மிதந்து சென்றனர். கண்களைக் கவரும் பலநிறப் பாம்புகள் போல் அவர்கள் ஒருவரை ஒருவர் வட்டமிட்டு, நெளிந்து நெளிந்து ஒருவரூடு