உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(272)

அப்பாத்துரையம் – 37

தலைவன் புதல்வியுடன் ஒரு காதலன் வந்து இரவு பாடுவதுண்டாம். அதனை மறைவில் கண்டு மகிழலாம்" என்றார்.

தலைவனுடைய அரண்மனையின் பக்கமே புரோத்தி யஸையும் காணலாம் என்றெண்ணி ஜூலியா அதற்கிணங்கினாள். ஆனால், அங்கே யாரோ ஒரு காதலன் வருவான் என்றிருந்ததற்க மாறாகத் தன் காதலனே வந்திருப்பது கண்டதும் அவள் நெஞ்சம் இடிவுற்றது.காதலன் எந்நிலையுற்றானோ என்ற கவலைக்கு மாறாக, இப்போது அக்காதலனது காதலையே இழந்த நிலையில் அவள் வாழ்க்கையில் மிகவும் வெறுப்புக் கொண்டாள். ஆயினும் காதலனை அண்டியிருந்தேனும் உயிர் பொறுக்கலாம் என்று எண்ணி அவள், அவன் பணியாள் விலகும் சமயம் பார்த்துத் தானே பணியாளாய்ச் சென்று சேர்ந்தாள்.

இங்கும் ஜூலியாவுக்குப் புதியதோர் இக்கட்டுத் தோன்றியது. அவள் ஜூலியா என்று கனவிலுங் கருதாத புரோத்தியஸ் அவளையே ஸில்வியாவிடம் காதல் தூதாக அனுப்பினான்.

ஸில்வியா புரோத்தியஸின் காதலை மறத்தபோது தான், ஜூலியாவிற்குச் சற்று அமைதி உண்டாயிற்று. அங்ஙனம் தனக்கு ஆறுதல் தந்த ஸில்வியாவினிடம் பற்றுக்கொண்டு, அவளிடம் புரோத்தியஸின் பரைய காதலைப் பற்றிப் படர்க்கைப் பான்மையில் ஜூலியா கூறினாள். ஸில்வியா அது கேட்டு அக்காதலுக்காளான ஜூலியாவினிடம் பரிவு கொண்டாள். தன்முன் நிற்கும் இளைஞனே அந்த ஜூலியா என்பதை அவள் அறிந்து கொள்ளவில்லை.

ஸில்வியாவின்

நிலைமை இப்போது மிகவும் டர்ப்பாடாயிற்று. ஒருபுறம் புரோத்தியஸின் தொந்தரவு; இன்னொருபுறம் தந்தை குறித்த மணநாள் நெருங்குகிறது. ரண்டிலிருந்து தப்ப என்னி 'எக்லாமர் என்ற பணியாளுடன் ரவே வெளியேறி ஓடிவிட்டாள்.

6. தெளிவு

ஸில்வியா வெளியேறினாள் என்று கேட்ட புரோத்தியஸ் தானும் அவளைப் பின்பற்றினான்.பணியாளுருவில் ஜூலியாவும்