உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 2

279

குற்றங்களே தலை சிறந்து விளங்கின. அரசுரிமை அவனை விட்டகலும் போதுதான், அவன் அரசர்க்குரிய பெருமை எய்தி விளக்கமுற்றான் என்னல்வேண்டும்.

இங்கிலாந்தில் முடியழிந்த மன்னர் ரிச்சர்டு நீங்கலாக மூவராவர். அவர், 2இரண்டாம் எட்வர்டு, 3முதல் சார்லஸ், 4இரண்டாம் ஜேம்ஸ் ஆகியோர். அவருள் பின் இருவரும் பொதுமக்கள் விழிப்படைந்தபின் அவர்களது விடுதலை யுணர்ச்சியின் பயனாக முடியிழந்தவராவர்.

ஆனால் ரிச்சர்டும் எட்வர்டும் முடியிழந்தது பொது மக்கள் விழிப்பாலன்று. அரசியல் வாழ்வில் அன்று பொதுமக்களோ நடுநிலை மக்களோ இடம் பெறவில்லை. பெருங்குடி மக்களே ஒருபுறம் பொதுமக்களைத் துன்புறுத்தியும், இன்னொருபுறம் மன்னரை எதிர்த்தும் நின்று, அன்று மேலோங்கியிருந்தனர். இவர்களின் எல்லையற்ற வன்மையால் எங்கும் உள்நாட்டுச் சண்டையே மலிந்திருந்தது.

ரிச்சர்டு ‘கரிய வீரன்' எனப் புகழ் பெற்ற 5எட்வர்டு இளவரசன் மகன். பேரரசரான மூன்றாம் எட்வர்டு இறந்தபின், எட்வர்டு இளவரசனே பட்டம் பெற வேண்டும். ஆனால், அவன் எட்வர்டு காலத்திலேயே போரிற் பட்டபடியால், ரிச்சர்டு அரசனானான்.

6

அரசனாகும்போது ரிச்சர்டு சிறுவனாகவேயிருந்தான். ஆகவே, அவள் சிற்றப்பனாகிய ஜான் ஆவ்காண்டு அவன் இடத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தான். ஆனால் ரிச்சர்டு செருக்கும் தற்போக்கு விருப்பும் உடையவன். விரைவில் அரசுரிமையைத் தன் கையிலேயே பறித்தெடுத்ததோடு, தன் விருப்பம்போல் நாட்டையாண்டும் நாட்டின் பொருட்குவையைத் தானும் தன்னைச் சேர்ந்தவருமாக, மட்டின்றிச் செலவு செய்தும் வந்தான். யாரேனும் இந்நடைகளை வெறுத்துப் பேசினால் அவர்களை அவன் ஈவிரக்கமின்றி அழித்தடக்கி வந்தான்.

இத்தகையோருள், ஜான் ஆவ் காண்டுக்கு இளையவரான கிளஸ்டர் 7கோமகன், 8யார்க் கோமகன் ஆகிய சிற்றப்பர் ஆ இருவரும் தலையானவர். ரிச்சர்டின் வஞ்சினம் அவர்கள்மீது சென்றது. அவனது சூழ்ச்சியால் பிரான்சு நாட்டில் ’கலேக்குச் சென்றிருந்த கிளஸ்டர், அங்கு வைத்தே கொல்லப்பட்டான்.