282
அப்பாத்துரையம் – 37
யன்றி வேறன்று, நார்போக், ஒருபுறம் அரசனிடம் தான் கொண்ட பற்றை அவன் எண்ணிப் பாராமல் தன்னைப் பகைவனோ டொப்ப நடத்திப் பகைவனுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று எண்ணினான். ஹென்றியோவெனில், நார்போக்கினிடம் பழிவாங்கு வதினின்றும் தடுக்கப்பட்டோம் என்று குமுறினான்.
ரிச்சர்டு இடுக்கண் வந்த நேரத்தன்றிப் பிற நேரங்களில் ரு கோழையே யாவன். அவன் நண்பனைப் புண்படுத்துவதை விடப் பலமடங்கு பகைவனைப் புண்படுத்தவே அஞ்சினான். முகம் ஒளியிழந்து வாட்டமுற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற நார்போக்கை அவன் ஏறெடுத்துக்கூடப் பாராமற் சீறிக்கொண்டு, புன்முறுவலுடன் ஹென்றி பக்கம் திரும்பித் “தாம் என் நெருங்கிய உறவினர் ஆயினும் ஒழுங்கை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கிறேன். பத்தாண்டுகளையும் பத்து நொடிகளாகக் கழித்து வருக” என்றான்.
இதனைக்கேட்டிருந்த ஹெரிபோர்டின் தந்தையாகிய ஜான் ஆவ்காண்டு,“அரசே, தமக்கு ஓர் ஆண்டு ஒரு நொடிதான்.எமக்கு ஒரு நொடி ஓர் ஆண்டாகும் என்பதில் ஐயமில்லை. அதிலும் என் இறுதி நாட்களில் பத்தாண்டு பிரிவதென்பது என்றென்றைக்கும் பிரிவதாகவே ஏற்படும் பத்தாண்டுகளுக்குள் என் காலம் கழிந்துவிடும்” என்றான்.
ரிச்சர்டு இயற்கையில் இளகிய நெஞ்சுடையவன். அதோடு ஜான் ஆவ்காண்டின் செல்வாக்குக்கும் உயர்வுக்கும் சற்று அஞ்சியவன். ஆகவே அவனைச் சற்று மதித்து, ஹென்றியின் ஒறுப்பு நாட்களை ஆறாண்டுகளாகக் குறைத்தான். ஆனால், அப்போதும் ஜான் ஆவ்காண்டு முணுமுணுத்துக் கொண்டே, “தமக்கென அரசே, தாம் ஒரு நாவசைப்பால் நாலு ஆண்டு குறைக்கவும் செய்யலாம்; நாற்பது ஆண்டு கூட்டவும் செய்யலாம். மனிதர் வாழ்க்கையெல்லாம் தன் போன்ற அரசர்க்கு ஒரு பந்தாட்டந்தானே” என்றான்.
இங்ஙனம் மகனும் தந்தையும் தன்னை ஒரு பொருட்டாய் எண்ணாமற் பேசினது ரிச்சர்டின் அமைதியையும் தற்பெருமை யையும் குலைத்தது. அவன் அன்று முதல் அவர்களுக்கு எவ்வகையிற் பாடம் படிப்பிக்கலாம் என்றெண்ணலானான்.