சேக்சுபியர் கதைகள் - 2
293
குன்றினான்.கடலைக்குடித்த குறுமுனிபோல இச்சண்டாளனையும், இவனைத் தாங்கி நின்ற இவ்வியனுலகையுமே விழுங்கி விடுவோமா என்ற பெருஞ்சினம் எழுந்து அவனைச் சிலநேரம் ஆட்படுத்திற்று. சினம் தீர்ந்தபின் துயர் அவனுள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன் நிலைமையைக் கண்டு அவன் அலறினான்; அழுதான்; மனம் புழுங்கிப் புழுங்கி விம்மினான். தன் நண்பரும் பணியாளரும் தேற்ற ஒருவாறு தேறினான். இறுதியிற் கார்லைல் தலைமகனை நோக்கி, “அந்தணாள, மன்னிக்கவும்; மாந்தரை வீழ்த்தும் துயர் மன்னனையும் ஆழ்த்துவது தகாதுதான். வாழ்வில் ஆட்சி செலுத்திய இக்கண்கள் மாள்விலும் ஆட்சி செலுத்தும் எனக் காட்டுவேன்” என்று எழுந்தான்.
பின் அவன் நார்தம்பர்லந்தை ஏறெடுத்து நோக்கி ஏளன நகைப்புடன், "பெருந்தகையோய், நின் பெருந்தகைத் தலைவனிடமிருந்து நீ கொணர்ந்த மாற்றமும் பெருந்தகைமை உடையதே. அரசன் முன் குடிகள் வருவதன்றிக் குடிகள் முன் அரசர் வருவதில்லையே! ஆயினும் இஃது உங்கள் காலம். நான் வருகிறேன்; இறங்கி வருகிறேன்; கீழ் முற்றத்திற்கே கீழ்நோக்கி இறங்கி வருகிறேன்; செல்க” என்றாள்.
ரிச்சர்டினிடம் அரைகுறை அன்புடையோர் அனைவரும் அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல் உற்றுழித்தீர்ந் தேகினார். ஒரு சிலர் மட்டும்உண்மை நட்புக்கிலக்காய்க் 'கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல ஒட்டி' நின்றனர். டுக்கண் என்பது, நண்பருள் நல்லவர் தீயவர் உண்மை யுடையவர் போலியானவர் இவர்களைப் பிரித்து வேறுபடுத்தும் அரிப்பன்றோ?
ரிச்சர்டின் வீழ்ச்சி உறுதிப்பட்டு விட்டது! வீழ்வ இன்றோ நாளையோ என்பது மட்டுந்தான் கேள்வி என்ற லையிலும், விடாது நின்ற அன்புரிமையாளர் சிலர் இருந்தனர். அவர்கள் "அரசே! பெருந் தன்மையற்ற இந்த ஹன்றி பாலிங் புரோக்கினிடம் ஆத்திரப்பட்டுத் தம் மனத்திலுள்ள தனைத்துங் கூறிவிட வேண்டாம். அவன் ஆள்வலியை வைத்துக்கொண்டு வெளிமிரட்டுக்கு ஒரு சாக்குத் தேடுகிறான். முன்கூட்டி அவன் முடிவை எடுத்துக் காட்டி,