சேக்சுபியர் கதைகள் - 2
299
என்ற முறையில் தம் துயரையும் பகிர்ந்து துய்க்கும் உரிமை யுடையவளன்றோ?" என்றாள் அப்பெண்மை அரசி.
66
ரிச்சர்டு மின்னியிடித்தார்த்து மழை பொழிந்து வெளித்தாலன்ன முகத்துடன் அவள் பக்கம் திரும்பி நோக்கி, 'என் உயிரே! நீ என் பகுதி மட்டிலும் அல்ல; என் உள்ளுயிர் நீ; உயிர் நிலை நீ; உன்னைத் தாக்காத எத்துயருக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் அஞ்சேன். ஆனால், உன்னைத் தாக்கும் துயர் என்னைக் கோழையாக்கி விடும். நீ ன் துயரை பகிர்வதற்கு மாறாக, அதனைப் பன்மடங்க் மிகைப்படுத்த மட்டுமே செய்யக்கூடும். ஆதலின் இவ்வுடல் எந்நிலை எய்தினும் அதனால் தாக்குறாமல் அதன் உயிராக விலகி நின்று மறுபிறப்பில் என்னுடன் வந்து சேர்வாய்" என்றான்.
அரசி அச்சொற் கேட்டுப் பின்னும் உருகினாள். பின் அவன் பக்கம் பாராது நார்தம்பர்லந்து பக்கம் நோக்கி,“என்னையும் சிறையாளியாக உடன் கொண்டேக வேண்டுகிறேன்” என்றாள்.
நார்தம்பர்லந்து கடுகடுத்த முகத்துடன், “அம்மணி! தம் கணவர் இப்போது சிறையாளியும் அரசியல் பகைவரும் ஆவர். அவருடன் செல்வது முடியாத காரியம். அது மட்டுமன்று, அவர் இப்போது நாட்டுப் பகைவரான படியால் அவருடன் பேசுவதும் பரிவு கொள்வதும் கூட, அரசியற் பகைமையாகக் கருதப்பட இடமுண்டு” என்றான்.
நாக்கில் நரம்பற்றுப் பேசப்பட்ட இம்மொழிகள் கேட்டுப்பொங்கிய சினத்தை உள்ளடக்கிக் கொண்டு அரசி பின்னும், “மன்னரை ஆக்கவும் அழிக்கவும் வல்ல மன்னர் மன்னரே! நான் அவருடன் காட்டும் பரிவு அரசியல் முறைப்படி மன்னன் என்ற வகையில் அல்லவே, பெண் என்ற முறைப்படி கணவன் என்ற வகையில்தானே! தனது புது மன்னனிடம் தம் எல்வாக்கைப் பயன்படுத்தி, என் கணவனுக்கு இத்துயர் பொழுதில் துணையாய்ச் சில நாட்களேனும் உதவ இணக்கம் அளிக்கலாகாதா?" என்று மன்றாடினாள்.
நார்தம்பர்லந்து இரக்கமின்றி, “இதற்கு மன்னனிடம் செல்ல வேண்டுவதில்லை. முடியாதென்று நான் கூறிவிட்டேன்" என்று தன்னாண்மையுடன் கூறினான்.