உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அப்பாத்துரையம் - 37

ரோஸலிண்ட் அடிக்கடி ஆர்லண்டோவைப் பற்றித் தன் பேசினாள். அவள் அவன் மீது காதல்

தங்கையிடம்

கொண்டிருத்தலை ஸீலியா அறிந்தாள்.

ஸர் ரோலண்டின் மகனைக் கண்டது முதல் அரசனுக்குத் தமையன் மீதுள்ள வெறுப்பு வளர்ந்து வந்தது. தமையனுடைய மகளாகிய ரோஸலிண்டைப் பற்றி யாரேனும் புகழ்ந்து பேசினால், அஃது அவனுடைய பொறாமையைத் தூண்டும். ஒருநாள் அவன் ஸீலியாவின் அறைக்குச் சென்றபோது, ரோஸலிண்ட் ஆர்லண்டோவைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்பேச்சைக் கேட்ட மன்னன் வெகுண்டு, “ரோஸலிண்ட்! நீயும் காட்டிற்குச் சென்று உன் தந்தையோடு இரு; இங்கு இருத்தல் கூடாது,” என்று கட்டளையிட்டான். ஸீலியா மிக்க மனவருத்தம் அடைந்தாள். தமக்கையாகிய ரோஸலிண்ட்தன்னைவிட்டுப் பிரிதல் கூடாது என்று தந்தையைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். பிரடரிக் தன் மகளின் வேண்டுகோளையும் பொருட்படுத்தவில்லை; ரோஸலிண்ட் காட்டிற்குச் செல்லவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினான்.

தந்தையின் மனத்தை அறிந்த ஸீலியா தானும் தமக்கை யுடன் காட்டிற்குச் செல்லத் துணிவு கொண்டாள். இருவரும் அன்றிரவு ஆர்டென் என்ற காட்டிற்குப் புறப்பட்டனர். அவ்விடத்தில் தந்தையைக் காண வேண்டுமென்பதுரோஸலிண்ட் விருப்பம். வழியில் ஏதேனும் இடையூறு நேராதவாறு தடுப்பதற்காக, வழக்கமான உடைகளை அவர்கள் உடுக்கவில்லை. ரோஸலிண்ட் ஆண் உடை உடுத்தாள்; கனிமீட் டுத்தாள்; கனிமீட்7 என்று பெயர் வைத்துக் கொண்டாள்.ஸீலியா அலைனா என்று பெயர் பூண்டு,நாட்டுப் புறத்துச் சிறுமிபோல் தோன்றினாள். இவ்வாறாக நெடுந்தூரம் நடந்து சென்ற அவர்கள் அக்காட்டை அடைந்தார்கள்.

8

அங்கே அவர்கள் பசியால் வருந்தினார்கள். ஸீலியா மிகக் களைப்பு அடைந்தவளாய்ச் சோர்ந்தாள். ரோஸலிண்ட் தன் நிலையை வெளியே சொல்லாதவளாய் வருந்தினாள்; என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்; அப்போது அவ்வழியே ஒருவன் வரக்கண்டாள். அவனிடம் தந்தையின் நிலைமையைக் கூறி எங்கிருந்தாவது சிறிது உணவு பெற்றுத் தருமாறு வேண்டினாள். அவன் ஓர் இடையனுடைய