உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

35

அனைவரும் வியந்தனர். அப்போது ரோஸலிண்ட் ஒன்றையும் மறைக்காமல் தன் சிற்றப்பன் தன்னை வெறுத்துக் காட்டிற்குப் போக்கியது, தங்கை ஸீலியாவும் தன்னைத் தொடர்ந்து வந்தது காட்டிற்கு வந்தபின் இடையனும் இடைச்சியுமாக வாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் தந்தையிடம் விரிவாக உரைத்தாள். இவற்றை அறிந்த எல்லோரும் வியப்பும் களிப்பும் கொண்டனர். திருமணங்கள் இரண்டும் நடைபெற்றன. மர நிழலில் அமர்ந்து எல்லோரும் வியந்து உண்டனர்.

அப்போது, அங்கு ஒருவன் வந்து அரசனுக்கு ஒரு செய்தி அறிவித்தான். "அரசே வாழ்க, வாழ்க! தங்கள் நாட்டைத் தங்களுக்கே கொடுத்துவிட்டார் தங்கள் தம்பியார்; தாங்கள் முன்போலவே முடிசூடி நாட்டை ஆண்டருளல் வேண்டும். இதனைத் தெரிவிக்கவே நான் இப்போது வந்தேன்” என்றான்.

தன்மகள் ஸீலியா ரோஸலிண்டுடன் ஓடிவிட்டாள் என்பதை அறிந்ததும் பிரடரிக் சினங்கொண்டான். நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் காட்டிற்குச் சென்று தமையனோடு வாழ்ந்து வருதல் அவன் மனத்தைப் புண்படுத்தியது; தமையன்மீது கொண்டிருந்த வெறுப்பும் மிகுந்தது. ஆகவே, அவன் ஒரு பெரும்படையுடன் சென்று தமையனையும் அவனுடைய நண்பர்களையும் கொல்லத் துணிந்தான். அவ்வாறே அவன் படையுடன் புறப்பட்டுக் காட்டை நோக்கி வரும்போது, வழியில் துறவி ஒருவர் எதிர்ப்பட்டார். அவர் மெய்யுணர்வு உடையவர் இறைவன், உயிர், பிறவிப் பயன் இவற்றைக் குறித்து அவருடன் பிரடரிக் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தான். அவன் மனம் பெரிய மாறுதல் அடைந்தது. உண்மை ஒழுக்கமும் தூய துறவுமே உயிர்க்கு உறுதி பயப்பன என்று அவன் தெளிந்தான்; தமையனுக்கே நாட்டைத் தந்து, துறவியாய் வாழத் துணிந்தான்; தமையனுக்குத் தான் இழைத்த தீமையை எண்ணி நொந்தான்; நாட்டில் வாழ்ந்த பெருமக்கள் பலர் தங்கள் செல்வத்தைத் துறந்து காட்டில் வாழ்வதற்குக் காரணமாக இருந்த தன் கொடுமையை நினைந்து நினைந்து வருந்தினான்; உடனே, தமையனிடம் ஓர் ஆள் அனுப்பினான்; அவன் தான் மேற்குறித்த செய்தியை அரசனுக்கு அறிவித்தவன், காட்டில் வாழ்ந்த பெருமக்களும் நாட்டிற்குச் சென்று தங்கள் செல்வத்தை மீண்டும் பெற்றுச்