உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்சுபியர் கதைகள் - 1

39

பாங்கோவின் மொழிகள் மாக்பெத் மனதை மாற்றவில்லை. பாங்கோ உண்மையான நண்பன்; ஆகையால் நன்மையான அறிவுரை பொறாமையும் தீய

கூறினான்.

ஆனால்

எண்ணங்களுமே மாக்பெத் மனதில் வளர்ந்தன. ஸ்காட்லாந்து அரசாட்சியைப் பற்றிய ஆசை அவனைக் கெடுத்தது.

2. மாக்பெத் மன்னனைக் கொல்லுதல்

மாக்பெத் வீடு திரும்பியதும், நிகழ்ந்தன எல்லாம் தன் மனைவிக்குத் தெரிவித்தான்; மாயக்காரிகள் வாக்கு ஒன்று மெய்ப்பட்டவாறும் அறிவித்தான்; ஸ்காட்லாந்து

அரசாட்சியைப் பெறுதல் திண்ணம் என்று தன் நம்பிக்கையையும் விளக்கினான். அவனுடைய மனைவி நல்லெண்ணம் உடையவள் அல்லள்; பிறர்க்குத் தீங்கு செய்யப் பின்வாங்காதவள்; ஆகையால் பேய் போல் அலையும் இயல்பினள். எனவே, எவ்வகையிலேனும் அரசாளும் உரிமையைப் பெற்றே தீரவேண்டும் என அவள் துணிந்தாள். தீய வழியில் முயற்சி செய்து அதனைப் பெறுவதில் மாக்பெத்துக்கு விருப்பம் இல்லை. “அரசனைக் கொன்று அரசுரிமை பெறுதல் நமக்குத் தகாது. மாயக்காரிகள் வாக்கு அவ்வாறுதான் நிறை வேற வேண்டுமா? அச்செயலுக்கு என் மனம் இசையாது,” என்று அவன் கூறி வருந்தும் போதெல்லாம், அவனை அவள் தேற்றி ஊக்கம் அளித்துவந்தாள்.

அரசன்,அடிக்கடி மாக்பெத், பாங்கோ போன்ற தலைவர்கள் வீடுகளுக்குச் சென்று விருந்தினனாகத் தங்கியிருப்பது உண்டு. ஒரு நாள் தன் மக்களாகிய மால்கம் டனால்பின் என்னும் இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு அவன் மாக்பெத் ட்டிற்கு விருந்தினனாக வந்தான். அவனுடன் ஏனைய தலைவர்களும் வேலை யாட்களும் வந்தார்கள். அவன் மாக்பெத் வீட்டிற்கு வந்தது, அவன் பெற்ற வெற்றியைப் பாராட்டி அவனைப் பெருமைப்படுத்துவதற்கே ஆகும்.

மாக்பெத் மனைவி நகைமுகமும் இன்மொழியும் உடையவளாய் அரசனை வரவேற்று மகிழ்வித்தாள். அவள் விருந்தோம்பும் முறையை அரசன் உவந்து போற்றினான்.ஆனால் அவள் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று செய்தலை அரசன்