உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் – 37

பார்த்து,

உடனே அவ் உருவத்துடன் அவர்களைப் 'பிராஸ்பிரோவை நாட்டிலிருந்து துரத்தி அரசுரிமை கவர்ந்தீர். அவரையும் அவர் மகளையும் கடலில் மாளுமாறு விட்டுச் சென்றீர். அந்தக் கொடுமையாலேதான் இப்போது இந்தத் துன்பங்களும் நடுக்கங்களும் உங்களுக்கு ஏறப்பட்டிருக்கின்றன; என்று எடுத்துரைத்தேன். அவர்கள் அதைக் கேட்டு மெய்ம்மறந்து போனார்கள்”, என்று ஏரியல் கூறினான்.

மீண்டும், அவன் பிராஸ்பிரோவைப் பார்த்து, "நேபல்ஸ் மன்னனும் அந்தோனியாவும் செய்த தவற்றை நினைந்து மனம் வருந்துகிறார்கள்; உண்மையாகவே அவர்கள் மனம் திருந்தி வருந்துகிறார்கள்; அவர்கள் நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளாதிருக்க முடியவில்லை,” என்றான்.

“ஏரியல்! அப்படியானால், அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வா. ஆவியுருவாக உள்ள நீயே அவர்களுடைய துன்பத்திற்காக வருந்துவாயானால், அவர்களைப் போன்ற மனிதனாகிய நான் மனம் இரங்காதிருக்க முடியுமோ? உடனே போய் அவர்களை அழைத்துவா,” என்றான் பிராஸ்பிரோ.

அவ்வாறே ஏரியல் சென்று அரசனையும் அந்தோனி யோவையும் முதியவனான கன்ஸாலோவையும் அழைத்துச் சென்றான்; அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, அவர்களுக்கு முன்னே இசையுடன் பாடிக்கொண்டு சென்றான். இதை அவர்கள் வியந்து கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்து சென்றார்கள்.

பாய்மரம் முதலியன ஒன்றும் இல்லாத வெறும் படகில் பிராஸ்பிரோவையும் மிராந்தாவையும் அவனுடைய தம்பி கடலில் விட்டுச் சென்றான் அல்லனோ? அப்போது அந்தப் படகில் பிராஸ்பிரோவுக்காகச் சில நூல்களும் உணவு முதலியனவும் அன்புடன் வைத்திருந்த கன்ஸாலோதான் இப்போது அவர்களுடன் சென்றவன்.

அச்சமும் துன்பமும் அறிவுகலங்கச் செய்திருப்பதால், இப் போது பிராஸ்பிரோவை இன்னான் என்று அவர்கள் தெரிந்துக் காள்ளவில்லை. பிராஸ்பிரோ அவர்களைக் கண்டதும், முதலில் கன்ஸாலோவை வரவேற்றுத் தன்னை இன்னான் என்று தெரிவித்தான்; “என் உயிரைக் காத்தருளிய தோழனே! வருக!'