உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

81

ஆனால், அவன் அந்தோணியிருக்குமளவும் தன்நிலை உறுதியுடைத்தன்று என் அறிந்து அவனையும் அவனுக்கு உடந்தையாயிருந்த கிளியோப்பத்ராவையும் உயிருடன் கைப்பற்றிச் சிறையுள் வைக்க எண்ணினான். ஆனால், இறக்கும் தறுவாயிலும் சிங்கவேற்றை மக்கள் அணுக அஞ்சுவதுபோல அவனையும் கிளியோப்பாத்ராவையும் நேரில் அணுக அஞ்சித் தூதர் மூலம் அக்டேவியஸ் அவர்கள் மனநிலையறிந்து வரும்படி ஏவினான்.

அந்தோணி தனக்குப் பரிவு வேண்டியதில்லை என்றும் தன் துணைவர்களையும் கிளியோப்பாத்ராவையும் மட்டும் மதிப்புடன் நடத்தினால் போதும் என்றும் கூறினான்.பின் அவன் கிளியோப்பாத்ராவை நோக்கி இனித் தன்னை விட்டுவிட்டு ஸீஸரை நயந்து நல்வாழ்வு பெறவதே அவளுக்கு நல்லது; தனக்கும் அது மனத்திற்குகந்ததென வேண்டினான்.

இதுகாறும் பெண்மையின் மென்மையையே காட்டிய கிளியோப்பாத்ரா இச்சொற் கேட்டதே அரசியின் பெருமிதத் தோற்றங்கொண்டு தலை நிமிர்ந்து ஸீஸர் தூதனை நோக்கி, அரசி கிளியோப்பாத்ரா அந்தோணி ஒருவன் முன் மட்டுமே பெண் ஆவள்; பிறருக்கு அரசியேயாவாள், அரசி என்ற நிலையில் வாழமுடியவில்லையாயின் அரசியாகவே சாவ அறிவாள்” என்று கூறி அனுப்பிவிட்டுப் பின் அந்தோணி பக்கமாகத் திரும்பி, “என் அரசே! நீங்கள் கூட என் காதலை இங்ஙனம் பழிக்கப் பொறுக்கேன், அந்தோ! நான் கரிய எகிப்தியரிடைப் பிறந்து ஜூலியஸ் ஸீஸர் முதலிய பலருடன் உறவாடியதை நினைத்தா லன்றோ என் அந்தோணி! என்னை இவ்வளவு இழிவாக மதிக்க இடமேற்பட்டது! என் அந்தோணியைக் காணுமுன் நான் யாதாயினும் ஆகுக! அந்த அரும்பொருளைக் கண்டபின், அதன் காதலின் பெருக்கையும் அளவிட்டறிந்த பின், அஃதன்றி நான் வாழ்தல் கூடுமோ? அந்தோணியை ஒத்த மதயானையைப் பிணித்த இக்காதற் கரங்கள் இனி ஸீஸரையொத்த குள்ள நரியையும் பிணிக்க முற்படுமோ? என்ன என் அந்தோணி மனத்துட்கொண்ட கருத்தின் போக்கு!” என்றாள்.

ஆழத்தையும் உயர்வையும்