உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம்

3. அதிரியானாவின் தங்கை: இறுதியில் அந்திபோலஸின் மனைவி.

ளைய

4. அதிரியானாவின் பணிப்பெண்: மூத்த துரோமியாவின் மனைவி.

5. அதிரியானாவின் பணிப்பெண்ணின் தங்கை: இறுதியில் இளைய துரோமியோவின் மனவிை.

6. நடிகை: மூத்த அந்திபோலஸின் காதலி.

கதைச் சுருக்கம்

கப்பலுடைந்ததனால் ஸைரக்கூஸ் நகரச் செல்வன் ஈஜியனுடைய மூத்த மகன் அந்திபோலஸும், அவன் வேலையாள் துரோமியோவும் எபீஸஸில் தங்கினர். அந்திபோலஸ் நகரத் தலைவன் உறவினன் மெனபோன் நட்பினால் அவன் மருகியாகிய அதிரியானாவை மணந்து படைத்தலைவனாய் வாழ்ந்தான். அவன் பணியாள் துரோமியோவும் அதிரியானாவின் பணிப் பெண்ணை மணந்தான். ஈஜியன் மனவிை அதே நகரில் ஒரு மடத்தில் சேர்ந்து மடத் தலைவியானாள். ஈஜியனும் மூத்த அந்தி போலஸுடன் பிறந்து அவனையே போன்ற உருவுடைய இளைய அந்திபோலஸும், துரோமியோவையே போன்ற உருவுடைய அவன் தம்பி இளைய துரோமியோவும் ஸைரக் கூஸில் வாழ்ந்தனர். தமையனையும் தாயையும் தேடி இளைய அந்தி போலஸும் துரோமியோவும் எபீஸஸ் செல்ல, அவர்களைப் பின்பற்றிச் சென்ற ஈஜின் ஸைரக்கூஸருக்கெதிரான எபீஸ! நகரத்துச் சட்டப் பொறியுட் பட்டுக் கோபத் தீர்ப்பளிக்கப் பட்டான்.ஆயினும், அவன் மீதிரங்கித் தலைவன் மாலை வரை ஆயிரம் பொன் தண்டம் செலுத்தித் தண்டனையிலிருந்து தப்புமாறு கூறினான். இதற்கிடையில் இரு அந்திபோலஸ்களும், இரு துரோமியோக்களும் ஒரே உருவுடையவராயிருந்ததனால், அதிரியானா, அவள் பணிப்பெண் முதலியோரும், மூத்த அந்திபோலஸினிடம் காதல் கொண்ட நடிகையும் அவள் பொற் சங்கிலி செய்யக் கொடுத்திருந்த பொற்கொல்லன் ஒருவனும் பலவாறு குழப்பமடைந்தனர். இறுதியில் ஈஜியன் தூக்கிலிடப் போகும் தறுவாயில் அவன் மனைவியாகிய மடத் தலைவியும்,