உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

109

கட்டிடத்தினுள் நுழைந்தனர். அதிரியானாவும் பணிப்பெண்ணும் அங்கும் நுழைய முயன்றனர்.

அக்கட்டிடமே ஈஜியன் மனைவி மடத்தலைவியாக அமர்ந்து நடத்திய மடமேயாகும். இளைய அந்திபோலஸும் இளைய துரோமியோவும் அதிரியானாவில் துரத்தப்பட்டுத் தஞ்சம், தஞ்சம் எனத் தன் மடத்திற் புகுந்தபோது, அவள், அவர்கள் தன் பிள்ளையும் பணியாளுமேயாவர் என்பதை அறியாதவளாய்த் தன் இயற்கை இரக்க மனப்பான்மையினால் அவர்களுக்குத் துணை தர முன்வந்தாள்.

அதிரியானவும் அவள் பணிப்பெண்ணும் தம் கணவர் பித்துக்கொண்டவராதலால், அவரைத் தம்மிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், மடத்தலைவியான ஈஜியன் மனைவி, “அவர்கள் அறிவிழிந்து பித்துக் கொண்டால், நீங்கள் அமைதி இழந்து பித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அவர்களை ஆதரிக்கும் நிலை உங்களுக்கில்லை. நானே அவர்களை ஆதரித்து உங்களிடம் ஒப்புவிக்கிறேன்” என்று கூறிவிட்டாள்.

மேலும், அதிரியானா தன் கணவனிடம் மட்டற்ற பற்றுக் கொண்டவளாயினும், அதன் காரணமாகப் பொறுமையும் நல்லுணர்வும் இழந்து, அவன் மீது ஐயங்கொண்டு அவனுக்கு ஓயாத தொந்தரவு கொடுத்து வருவதையும் மடத்தலைவி உய்த்துணர்ந்து கொண்டாள். ஆகவே, அவள் தனது இனிய நேரிய மொழிகளால் அதிரியானவுக்கு அவள் குற்றம் தென்படும் வண்ணம் அறிவுரை நல்கினாள். அதிரியானவும் தெருட்சியுற்றுப் பொறுமையுடன் கணவன் குறிப்பறிந்து நடப்பதாக ஒத்துக் கொண்டாள். ஆயினும், மடத்தலைவி அவளை முற்றும் நம்பி அந்திபோலஸையும் துரோமியோவையும் அவளிடம் ஒப்படைக்க மனமில்லாமல் அவர்கள் அனவைரையும் நகர்த்தலைவனிடம் கொண்டு போய் நிறுத்தி அவன் மூலம் ஆவன செய்ய வேண்டுமென்று கருதினாள்.

6. முடிவு

அந்திபோலஸின் தாய் மடத்தலைவியாய் இருந்த இம்மடத்தின் முன்புறமே அந்நகரின் தூக்குமேடை