உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம்

தொடர்பற்றவர்கள் போலத் தனித்தனி வந்து அவன் மனத்தைக் கரைத்தனர். இறுதியில் புரூட்டஸ் அவர்கள் கட்சிக்குத் தலைவனாக நின்றுழைக்க ஒப்புக்கொண்டான்.

அவர்களது முதல் நடைமுறைக் கூட்டம், புரூட்டஸின் வீட்டுக்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் இரவில் கடையாமத்தில் நடைபெற்றது. அச்சமயம் உலகியல் அறிவு நிரம்பப் பெற்ற காஸியஸ் தனது வெற்றிக்கான பல கோரிக்கைகள் கொண்டு வந்தான்.அவற்றுள்,கட்சித் திட்டப்படி நடப்பதாகஆணையிடல், ஸீஸரோடு அவனது கட்சிக்கு ஆணிவேரான அந்தோணியையும் அகற்ற வேண்டுவது, அன்றைய நேரம் உலகின் தனிப்பெருஞ் சொற்பொழிவாளரான ஸீஸரோவையும் கிளர்ச்சிக்காரர் குழுவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகிய இவை தலைமை

யானவை.

து

உலகியல் அறிவைவிட நேர்மையும் கலப்பற்ற தூய உண்மையையுமே உயர்வாக மதித்த புரூட்டஸ், அவற்றுள் ஒவ்வொரு கோரிக்கையையும் தக்கதன்றென மறுத்துவிட்டான். ஆணையிடல் ரோமனது வாய்மொழியின் மதிப்பை அவமதிப்ப தென்றும் அந்தோணி கேளிக்கைகளை மட்டுமே பெரிதாக நாடித்திரியும் பட்டுப் புழுவேயென்றும், ஸீஸருக்குக் கைக்கருவி அல்லது வாலேயாவான் என்றும், ஸீஸரோ வெறும் பகட்டுக்காரன் என்றும் அவன் கொண்டான். இம்மூன்று டங்களிலும் காஸியஸின் பக்கமே முன்னறிவும் தொலை நோக்கமும் இருந்தன என்பதில் ஐயமில்லை. புரூட்டஸ் அரசியல் வாழ்வு சூழ்ச்சி வாழ்வு என்பதனை அறியாது. அதனினும் ஒழுக்கமுறைமையே வெற்றி பெறும் என்று நம்பினான். 3. சீசர் வீழ்ச்சி

கிளர்ச்சிக்காரரது திட்டம் எவ்வளவு மறைவாய் இருந்தபோதிலும், அதனால் ஏற்பட்ட பரபரப்பு அந்நகரெங்குந் தாக்கியது. எங்கும் மக்கள் மனத்திற் குழப்பமும் கலவரமும் நிறைந்திருந்தன. பலர் தாம் கொண்ட திகிலை உறுதிப்படுத்தும் தீக்குறிகளையும் தீக்கனாக்களையும் கண்டு மனம் பதைத்தனர். அன்று நகர மண்டபத்தின்மீது பட்டப்பகலில் ஆந்தைகூட வந்திருந்து கூவிற்றாம். இன்னோரிடத்தில் ஓர் அடிமையின்