உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம்

அதன்பின் ஸின்னாவும் தெஸிமஸ் புரூட்டஸும் வந்து பணிந்தனர். ஸீஸர் சற்றுப் பொறுமையிழந்து சினங்கொண்ட பார்வையுடன், "மேருவை அசைத்தாலும் ஸீஸரை அசைக்க முடியாது; அப்பாற் செல்க. மார்க்கஸ் புரூட்டஸ் சொல்லுக்குங்கூட இங்கு விலையில்லை என்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்றான்.

இதுவே தக்க சமயம் எனக்கண்டு பின் நின்ற காஸ்கா, “ஆயின் விலையுடையது இதுவே, “என்று கூறிக்கொண்டு, தன் உடைவாளால் அவன் முதுகிற் குத்தினான். அவனையே முதற் குறியாகக் கொண்டு காத்திருந்த கிளாச்சிக்காரர் அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக அவன்மீது பாய்ந்து குத்தினர்.

காஸ்கா குத்தினபோது ஸீஸர் திடுக்கிட்டுப் பின்னால் திரும்புமுன் மற்றக் குத்துக்கள் விழவே, அவன் உடல் பதைபதைத் தெழுந்தது.

ஆனால் அதற்குள் மார்க்கஸ் புரூட்டஸ் அமைதியுடன் அவன்முன் வந்து நின்று, உடைவாளை ஓங்கிக்கொண்டு,"ரோமின் பகைவன் வீழ்க; விடுதலையின் பகைவன் வீழ்க," என்ற மொழிகளுடன் அவன் நெஞ்சில் குத்தினான்.

ஸீஸர் அவனைக் கண்டதுமே திகைத்து, “என்ன, நீ கூடவா, புரூட்டஸ்,” என்றான்.

அவன் நெஞ்சிற் குத்திய குத்தினால், அவன் இதயம் வெடித்துக் குருதி புரூட்டஸ் மீதே பீறிட்டுப் பாய்ந்தது. சில நொடிக்குள் அவன்கீழே சாய்ந்து உயிர் நீத்தன்.

4. ஒட்டகத்துக்குக் கிடைத்த இடம்

இதுவரை கிளாச்சிக்காரர் திட்டத்திற்குக் கலப்பற்ற வெற்றியே கிடைத்து வந்தது. ஆனால் ஸீஸர் இறந்து பின்புதான், ரோம் நகரத்திற்கு அவனது ஆட்சி முறை எவ்வளவு இன்றியமையா ஏற்புடையது என்பது விளங்கலாயிற்று. தமது திட்டம் நிறைவேறியதும் அவ்வரசியல் மன்றத்தார்க்குத் தன் கட்சியின் கொள்கைகளை விளக்கி அவர்கள் உதவியால் குடியரசை நடத்தவேண்டும் என்பது புரூட்டஸின் ஏற்பாடு. ஆனால் ஸீஸர் கொலையுண்டது கண்டு திடுக்கிட்ட அரசியல் மன்ற உறுப்பினர், அவனது குருதியில் தோய்ந்த உடைவாள்கள் பின்னுஞ் சுழல்வது