உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம்

தந்தான். அதன்பின் அந்தோணி, "உங்களைத் தாக்காமல் ஸீஸரை நண்பர் என்ற முறையில் மட்டும் புகழ்ந்து என் நட்பை-நட்பின் கடனை-ஆற்றலாமன்றோ,” என்று கேட்டான்.

புரூட்டஸ் அதற்கும் இணங்கி, “முதன் முதலில் என் கட்சியின் நிலையை நானே யாவரும் அறிய விளக்கிவிடுவேன்; அதன்பின் நீ போகலாம்," என்று கூறினான்.

காஸியஸ், அப்போதே தன் திட்டம் உலைந்து விட்டதென முணகினான். ஆனால் புரூட்டஸை எதிர்ப்பது எப்படி? அதுவும் அந்த நேரத்தில்!

5. சொல்லாண்மையா வில்லாண்மையா?

புரூட்டஸ் மேடையிற் சென்று, அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் முன்நின்று, பேசினான்:

"பகுத்தறிவுடைய என் நாட்டு மக்களே! எங்கள் செய்கை உங்கள் அறிவிக்குச் சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாவிட்டால் நீங்கள் தரும் தண்டனையை ஏற்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பகையாரும் இல்லை. ஜூலியஸ்ஸீஸரைப் பற்றிய மட்டில், அவன் என் ஆருயிர் நண்பன். அவன் இறந்ததற்காகக் கண்ணீர் விடுபவருள் நானும ஒருவன். அப்படியாயின் அவனை நான் என் கொன்றேன் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடையாவது, அவனிடம் என் அன்பு குறைவுடையது. என்பதனாலன்று, நாட்டினிடம் என் அன்பு மிகுதியானது என்பதனாலேயாம்.

நாட்டுக்குப் பகைவர் யாராவது உளரென்றால் அவர் மட்டுமே எங்களுக்குப் பகைவர்! அப்பேர்ப்பட்டவர் யாராவது இருந்தால் கூறுக! உங்கள் விடைக்கு நான் காத்திருக்கிறேன். (கூட்டம்:யாருமில்லை) விடுதலை வேண்டா; அடிமை வேண்டும் என்று கூறுபவர் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமே நாங்கள் பகைவர். அப்பேர்ப்பட்டவர் யாராவது இருந்தால் முன்வருக? (கூட்டம்: யாருமில்லை). அப்படியாயின், எங்கள் செய்கை உங்கள் நண்பர் செய்கை; அதன் தீமை நன்மை உங்களுடையது. உங்கள் பேரால், உங்கள் விடுதலைக்குத் தடையாயிருந்த பெரியார் ஒருவரது உயிரை நாங்கள்