உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் - 39

பைஞ்ஞீலி தன் பொற்காசுகளில் இரண்டைத் தமிழகம் செல்லும் கலத்தின் மீகாமனிடம் கொடுத்துப் பொன்னாவிரையை அழைத்து வரும்படி கோரினாள். பொன்னாவிரையின் செலவு களுக்காக அவனுக்கும் இரண்டு காசுகள் கொடுத்தனுப்பினாள்.

பொன்காசுகள் கிடைத்ததைவிட அவற்றின் மூலம் பொன்னாவிரை கைவரப் பெற்றதற்கே பைஞ்ஞீலி பெருமகிழ் வடைந்தாள். பழந்தீவின் ஆட்சித் தலைவர் முன்னிலையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகத் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். இருவர் நிலத்தையும் தனிப்பெண்ணாகப் பைஞ்ஞீலி பண்படுத்தியது போக, இருவர் நிலத்தையும் ஒரே குடும்ப நிலமாக இப்போது பொன்னாவிரை பண்படுத்தினா விரைவில் சோழர் ஆட்சித் தலைவர் அவ்விருவர் நற்குணமும் திறமும் கண்டு, பொன்னாவிரையை ஆட்சித் துறையிலும் பைஞ்ஞீலியைக் கல்வித் துறையிலும் அமர்வித்தார்.

னான்.

நேச வாழ்வில் காட்டிய அதே பண்பையும் உறுதியையும் இருவரும் குடும்பப் பாச வாழ்விலும், நாட்டுப் பணிவாழ்விலும் காட்டி மேம்பாடுற்றனர்.