உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் - 39

அவனை என் மகன் போலவே நேசிக்கத் தொடங்கிவிட்டேன். அவன் எங்கிருக்கிறான் என்று அறியாமல் நீங்கள் அடையும் துயரை அவனை விட்டுப் பிரியும்போது நான் அடையும் துயரே எனக்குக் காட்டுகிறது.

"சோழ நாட்டுக்கும் ஈழநாட்டுக்கும் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதாகச் செவியுற்றேன். அந்த விழா நாளில் நான் கலக்க முடியாதவனாய் விட்டேன். ஆனால் என் வளர்ப்புப் புதல்வனும் அவன் குடும்பமுமாவது அதில் முழுதும் பங்கு கொள்ளட்டும் என்ற எண்ணத்துடனேயே நான் தங்கமணியை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். என் அன்பையும் சேர்த்து அவனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்களென்று நம்புகிறேன்.

மறவா அன்பன், மீனவன்."

கடிதத்தை வாசித்து வானவன் கண்ணீர் வடித்துக் கதறியழுதான். தான் மீனவனுக்குச் செய்த கொடுமைகளை மைந்தனுக்கு எடுத்துக்கூறி, நயத்தக்க நாகரிகத்தை வாயாரப் புகழ்ந்தான்.