112
||--
அப்பாத்துரையம் - 39
அவன் வீட்டின் ஓர் அறை பெரிய நூலகமாயிற்று. அதில் வீற்றிருந்து அவன் கதை உலகை ஆட்சி செய்தான்.
வாசிப்பில், அவன் நடிப்பார்வம் பெரிதாயிருந்தது. அது நடிகர் நடிப்பார்வத்தை நாண வைத்தது. போர் பற்றி வாசிக்கும்போது அவன் போர் வீரனாய் விடுவான். அப்போது அவன் கைப்பிரம்பு சுழலும்! பல சமயம் அறையின் பொருள்கள் உடைபட்டுச் சின்னாபின்னமாகும். ஒரு தடவை கதையில் வரும் அபிமன்னன் தேர்க்காலை எடுத்து, எதிரிமீது வீசி எறிந்தான். வாசிக்கும் மாரியப்பன், தன்னையறியாமல் அபிமன்னனாய் விட்டான். அவன் முன்பிருந்த மைக்கூடு தேர்க் காலாயிற்று. அவன் அதை எடுத்து ஓங்கிச் சுவர்மீது வீசி எறிந்தான்.
நடிப்பார்வம் படிப்படியாக அவனை நடிப்புக்கே கொண்டு சென்றது. அவன் தானே நாடக மேடை உண்டு பண்ணினான். தானே நடித்தான். அத்துடன் நடிகர்களை அவன் தானே ஊக்கி நடத்தினான். நாடகங்களில் அவன் மேடை அதிர ஆர்ப்பரித்தான்.
அவன் அபார நடிப்புத்திறம் கண்டு புகழாதவர் இல்லை. அதேசமயம் அதைக் கண்டு அஞ்சாதவர்களும் கிடையாது. ஏனென்றால் அவன் தோற்றம் எல்லாரையும் நடுங்க வைப்பதா யிருந்தது.
வீரமிகுந்த ஒரு சிலர்தான் அவன் மேடையருகே துணிந்து சென்று நின்றார்கள். அவர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். மற்ற எல்லாரும் தொலைவில் நின்றே பார்த்தார்கள். நடிகர்கள் கூட அவனுடன் மேடையில் நின்று நடிக்க அஞ்சினார்கள்.
அவன் மேடையில் அவனே எப்போதும் தனிக் காட்டரசனாக விளங்கினான். அதில் அவனைத் தவிர யாருக்கும் புகழ் ஏற்பட வழியில்லை. யார் எவ்வளவு நன்றாக நடித்தாலும், மக்கள் எவரையும் பாராட்டி ஆரவாரம் செய்ய மாட்டார்கள். அப்படி யாரையாவது மக்கள் பாராட்டத் துணிந்தால், அடுத்த நாளே பாராட்டுப் பெற்றவருக்குச் சீட்டுக் கிழிந்துவிடும். அத்துடன், நடிகர் நடிப்பில் ஏதேனும் சிறு குறை இருந்தால் போதும்! அல்லது இருப்பதாக மாரியப்பன் கருதினால் போதும்!