உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

//--

அப்பாத்துரையம் - 39

அவள் மணிக்குரல் மீண்டும் எழுந்தது.

"பாரதவீரனே! என் உள்ளங் கவர்ந்த இளவரசே! நீங்கள்

கூறியபடியே யாவும் ஆகட்டும்.

66

'நீங்கள் விரைவில் வீரக்கவசம் அணியவேண்டும். வீரகுருவின் அருளும் அன்னை காளியருளும் பெறவேண்டும். என் காதல் சான்றாக, இத்தமிழகமெங்கும் சென்று வெற்றி உலா வரவேண்டும். உங்கள் வெற்றிப் புகழ் என் செவிகளையும் என் காதல் உள்ளத்தையும் நிறைக்கட்டும், எங்கும் இன்னலுக்காளான பெண்டிர், உங்களால் இன்னலம் பெறட்டும், சிறைப்பட்ட மக்கள் சிறைவீடு பெறட்டும். இடருட்சிக்கிய மக்கள் இனிய நல்வாழ்வு பெறட்டும்.

66

"இவ்வெற்றிப் புகழை முன் ஏகவிட்டு, அவற்றைத் தொடர்ந்து மீண்டும் எம்மிடம் வருக. வந்து எம் உடலுடன் உயிரை இணைப்பீராக!

இளவரசி என்ற பெருமிதம் குன்றாமல் காதற் குழைவுடன் அவள் பேசினாள்.

அவன் உள்ளம் குளிர்ந்தது. மெய் புல்லரித்தது. கனிவுடன் இளவரசியை நோக்கினான். பின் அவன் கூட்டத்தை நோக்கித் திரும்பினான்.

"பொதுமக்களே! இது உங்களுக்கு

என்று வீறுடன் கேட்டான்.

ணக்கந்தானா?”

“ஆகா! முழு இணக்கமே! முழுதும் இணக்கமே!” என்று குரல்கள் ஒரே குரலாக ஆரவாரித்தன.

அவன் இளவரசியின் கையை ஆர்வத்துடன் பற்றினான். வீரத்தின் முறுக்கும் இளமையின் துடிப்பும் அவன் நரம்புகளில் ஏறின. அவன் குரல் சிறிது கம்மிற்று. பின் வீறுடன் துள்ளிக் குதித்தது.

66

பேறு.'

‘அழகாரணங்கே! இளவரசியே! இனி உன் விருப்பம் என்

மணிச்சுருக்கமான அவன் பேச்சுக் கணீர் என்று ஒலித்தது. இளவரசி மீண்டும் வாய் திறந்தாள்.