உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

143

யிருந்தாள். பாரத வீரன் அந்த முன்தானைத் துண்டை ஆர்வமதிப்புடன் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அத்துடன் இளவரசியின் மதிப்பு உலகமெல்லாம் விளங்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அக்கருத்துடன், மலர் சூடுவதுபோல அவன் அதைத் தன் தலையணிமீது சூட்டிக்

காண்டான்.

கழுதைத் தேர், குதிரை முகம், ஒட்டுப்போட்ட வீரக்கவசம் ஆகியவற்றுடன் அந்த முன்தானைக் கட்டுக்கு இருந்த பொருத்தம் சொல்லுந்தரமன்று. அந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு களிக்க, பாலைவன வழியில் யாருமில்லை. ஊளையிடும் பாலைவனக் காற்றுத்தான் அதைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தது. தவிர, அந்தக் காற்றின் சுதிக்கிசைய எங்கும் 'இராவணன் மீசை'கள் ஆடிக் குதித்தோடிக் கொண்டிருந்தன. அவற்றுக்கும் அதைக் காணும் பேறு கிடைத்தது.

இராவணன் மீசைகளிடையே ஒரு பாரிய இராவணன் மீசையாகக் கழுதைத் தேர் உருண்டு புரண்டு ஓடிற்று.

மணி எட்டடிக்குமுன் வெயில் கொளுத்தத் தொடங்கிற்று. அனற்காற்றும் மெல்ல எழுந்தது. வழியெல்லாம் கண் மூடித்திறக்குமுன் மேடுகள் பள்ளங்களாயின. பள்ளங்கள் மேடுகளாயின. பாரத வீரன் உடலெல்லாம் வியர்வையாகக் கொட்டிற்று. அவன் நா உலர்ந்து, கண்கள் இருண்டன. ஆனால் அவன் உள்ளம் வீர குருவின் கற்பனை உருவைப் பற்றிற்று. உதடுகள் அன்னை திருநாமங்களைப் பற்றின. கைகள் ஆடி ஓடும் தேரின் தூண்களைப் பற்றின.

தேரின் வேகம் பின்னடையும்படி அவன் சிந்தனை சிறகு விரித்துப் பறந்தது. 'தனக்குரிய குருமூர்த்தி யாராயிருக்கக் கூடும்? அவரைத் தான் எப்படி, எங்கே காணமுடியும்? எப்போது காணமுடியும்? அல்லது அவர் தன்னை எப்படி வந்தடைவார்? இவ்வெண்ணங்களுடன் அவன் தேரில் செயலற்றுச் சாய்ந்திருந் தான். தேரோ, கழுதை இழுத்த இழுத்த திசையெல்லாம் சென்றது.

விசுவாமித்திரர் இராமன் வீரகுரு. அவர் தாமாகவே சீடனை நாடி வந்தார். விசயனின் ஒப்பற்றகுரு துரோணாச்சாரி.