உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 39

பாரத வீரன் தான் வந்த காரியத்தை மறக்கவில்லை. தன் வீரக் குறிக்கோளிலிருந்து நழுவவும் இல்லை. நாள்தோறும் அவன் தன் வீர குருவின் மனத்தைக் கரைத்தான். “எனக்கு வீரப் பயிற்சி அளித்து ஈடேற்றுங்கள். வீர உலாவில் வெற்றி பெற்று உலகாளத் திருவருள் பாலியுங்கள். இளவரசியுடன் வீர சிங்காதன மேறும்படி வாழ்த்துங்கள்” என்று நாள்தோறும் கோரினான்.

அவனை வழிக்குக் கொண்டுவரும் வகை அவன் மனப் போக்கின்படி நடப்பதே என்று வண்ணான் கருதினான். கண்ணாயிரமும் வள்ளியும் இதை ஒத்துக்கொண்டனர். அத்துடன் கண்ணாயிரம் அதே வழியில் வண்ணானை ஊக்கினாள். “இளவரசியை அவன் மணப்பதனால் நமக்கு ஒரு குறைவுமில்லை. மேலும் அதனால் அவன் அரசனாவான். அரசனானபின் நம் வள்ளியை மறக்காமல், மணந்து கொண்டால் போதும். மருமகன் அரசனாயிருக்கும் பேறு கிடைத்தால், மகள் இரண்டாந்தாரமாய் இருப்பது ஒரு குறை ஆகாது; அவள் பட்டத்தரசியாய் இல்லாவிட்டாலும், கேடொன்றும் இல்லை. இளைய அரசியாகவே அவள் நிலை போதிய உயர்வுடையதாய் இருக்கும். இன்றிருக்கும் நம் நிலையைவிட அது நம்மை எவ்வளவோ உயர்த்திவிடும்” என்றாள் அவள். வீரகுரு சீடன் காதில் இதை எல்லாம் ஓதினார்.

மன்னர் பெருமன்னர் பட்டத்தரசியல்லாமல், வேறு மனைவியரையும் மணப்பதுண்டு, பட்டத்தரசிகூட இதை வெறுப்பதில்லை. பாரத வீரன் இதை அறிந்திருந்தான். விசயன் வாழ்வு இவ்வகையில் அவனுக்குப் போதிய முன் மாதிரியாகவும் இருந்தது. ஆகவே இளவரசிக்கு இனியவனாக நடந்து, அவள் இணக்கம் பெற்று, குருவின் விருப்பத்தையும் நிறைவேற்ற அவன் முடிவு செய்தான்.

பாரத வீரன் வீரத்திறங்களைக் காண வீரகுரு விரும்பினார். வள்ளியும் கண்ணாயிரமும் உடனிருந்தனர். அவர்கள் கண்டு அகங்களிக்க, அவன் தன் வாளாண்மை, வில்லாண்மைத் திறங்களைக் காட்டினான். வீரகுரு அவற்றைப் பாராட்டினார். அவற்றில் அவனை ஊக்கினார். அவற்றைப் புகழ்ந்தார். இவையே அவர் தரும் பயிற்சியாய் அமைந்தது. ஆனால் அவன் வீரத்தை வளர்க்க வேறு எதுவும் தேவைப்படவில்லை. குருவருளால்