180
அப்பாத்துரையம் - 39
வண்டியோட்டிஅனைவர் முன்னிலையிலும் பாரத வீரனை மும்முறை வலம் வந்தான். அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தான். பின் அனைவரும் சான்றாக, அவன் பேசினான். தன் சார்பிலும் சிங்கத்தின் சார்பிலும் அவன் நன்றியுரை, வணக்கவுரை,புகழுரை வழங்கினான்.
"பாரத வீரன் அவர்களே! பட்டி மந்திரி அவர்களே! தோழர்களே!
"நான் இப்போது பேசுவதற்கு, இங்குள்ள ங்குள்ள எல்லா வீரர்களும் விலங்குகளும் சான்றாய் இருக்கிறீர்கள்.
"சிங்கத்தைக் கண்டு அஞ்சாத மனிதர் இல்லை. வீரர் இல்லை. என் சிங்கமோ இதுவரை வீரர் பலர் காவலுக்கும் அடங்கியதில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எமனுடன் பழகுவதுபோலவே காவலர் அதனுடன் பழகுகிறார்கள். நானும் அப்படியே பழகி வருகிறேன். பூட்டும் காவலும் மீறி அது எத்தனையோ உயிர்களைக் குடித்து வந்திருக்கிறது. ஆனால் பாரத வீரன் முன் விரும்பவில்லை. கிட்டத்தட்டக் கால்மணி நேரம் கதவு திறந்திருந்தது. அச்சமயம் காவல் எதுவும் இல்லை. இது உணவு நேரம். இன்னும் உணவு தரப்படவில்லை. அது கொடும்பசியுடன்தான் இருந்தது. இந்த நிலையிலும் அது பாயத் துணியவில்லை. அவன் வீரத்தைக் கண்டு நடுங்கிற்று. அச்சம் தெரிவித்தது.பணிவு தெரிவித்து மண்டியிட்டது. இவ்வளவையும் நானும் பார்த்தேன். நீங்களும் பார்த்திருக்கிறீர்கள். உங்கள் சார்பிலும் என் சார்பிலும் பாரத வீரன் ஒப்புயர்வற்ற, மனித எல்லை மீறிய வீரத்தைப் பாராட்டுகிறேன், புகழ்கிறேன். அந்த வீரனுக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். சிங்கத்தைக் கொண்டுசெல்லும் படி அவர் இசைவு அளித்திருக்கிறார். அதற்கு நன்றியும் தெரிவிக்கிறேன். சிங்கம் செல்லும் இடமெல்லாம், நான் அவர் புகழைப் பரப்புவேன் என்றும் உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.
"இவ்வளவும் நான் என் சார்பில் கூறுபவை. ஆனால் நானே சிங்கத்தின் பேராள், காவலன், சிங்கம் மனிதனாயிருந்தால், இவ்வளவையும் நம் தமிழ் மொழியிலே கட்டாயமாக எடுத்துரைத்திருக்கும். வாயாடா விலங்காய் இருப்பதனால் இது செய்யமுடியவில்லை. சிங்கத்தின் மொழியில் அது தெரிவித்