உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 39

(196) ||. ஒத்தடமிட்டான். சருகுப் படுக்கைசெய்து அதில் அவனைக் கிடத்தினான். கோவேறு கழுதையையும் அவன் இதேபோலக் கவனித்தான்.

பெரும்பாலும் அடிகள் ஊமையடிகளாகவே இருந்தன. இரவு வேதனை பெரிதாயிருந்தாலும் பாரத வீரனும் கோவேறு கழுதையும் பின்னிரவில் நன்றாக உறங்கி எழுந்தார்கள். வேதனை போனவுடன் பாரத வீரன் அடிகளையும் மறந்தான். அவனை உறுத்தியது தோல்வி மட்டும்தான். காலையில் ஏற்றம் மீண்டும் வேலை தொடங்கிற்று. இதைக் கவந்தன் வெற்றி எக்களிப்பு என்று அவன் கருதினான். அவன் முந்தின முயற்சியில் மீண்டும் ஈடுபட் முனைந்தான்.

இத்தடவை பைத்தியக்காரத்தனமாக இம்முயற்சியைத் தடுக்க, பட்டிமந்திரி தன்னாலான மட்டும் முயன்றான்.

அது கவந்தனல்ல, ஏற்றம் தான் என்ற வாதம் பாரத வீரன் காதில் ஏறவில்லை. “அருட்பார்வையற்றவர்கள் கண்ணுக்கு அது வேறுமாதிரி தெரிவது இயல்புதான். மேலும் அரக்கர்கள் மாயமருட்சியில் தேர்ந்தவர்கள். சீதையின் கண்களுக்கு மாரீசன் பொன்மானாய்த் தோற்றவில்லையா? சூரபன்மன் மாமரமாக உருமாறி ஏமாற்றப் பார்க்கவில்லையா? அதுபோல அறியாத உன் போன்றவர்களை ஏமாற்றவே கவந்தன் ஏற்றமாகக் காட்சி யளிக்கிறான். நேற்று எப்படியோ தன் மாயத்தால் என்னை வீழ்த்தப் பார்த்தான். ஆனால் நான் கற்கி. தெய்வக் குருதி என் உடலில் ஓடுகிறது. என்னை அவன் அழிக்க முடியாது. இன்று வெற்றியுடன் மீளுகிறேன், பார்" என்று கூறி அவன் மீட்டும் போருக்கெழுந்தான்.

கோவேறு கழுதை ஆகவே

முடியவில்லை.

ன்னும் நன்றாக நடக்கக்கூட பாரத் வீரன் கால்நடையிலேயே தாக்குதல் தொடங்கினான்.

இப்போது

ஏற்றம் உயரும்போது அவன் கீழிருந்து ஈட்டியால் தாக்கினான். தாழும் சமயம் மேற்புரம் வாளால் வெட்டினான். மரத்தில் பட்டு, ஈட்டி அடிக்கடி வளைந்தது. கல்லின் மேல் தாக்கி வாள் முனை மழுங்கிற்று. தவிர, சில சமயம் ஏற்றம் ஈட்டியையும், ஈட்டி அவனையும் தூக்கி எறியலாயின. ஆயினும் முந்தின