மருதூர் மாணிக்கம்
66
(205
அடிமைக் கணக்காடா உனக்கு வேண்டும். இதோ! இதோ!” என்று அவன் மீது பாரத வீரன் அடி, உதை, குத்து ஆகியவற்றை மழையாகப் பொழிந்தான்.
ஐயோ, ஐயோ! போதும், போதும்! என்னை விட்டு விடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் விட்டு விடுங்கள்” என்றான்.
“முதலில் பையனை அவிழ்த்து விடு” என்றான்.பாரத வீரன்.
அவன் அவிழ்க்க விரும்பவில்லை. ஆனால் மீட்டும் ஓங்கும் ஈட்டி அவிழ்க்க வைத்தது.
"நான் யார் தெரியுமா? நான்தான் கண்கண்ட கற்கி, கலியுகராமன், பாரத வீரன், சிங்கத்தை வென்ற வீரசிங்கம்! இந்த நாட்டிலேயே - உலகத்திலேயே - இனி அடிமைத்தனம், சிறை, இன்னல்கள் எதுவும் இருக்கக் கூடாது. அதை ஒழிக்க நான் பிறந்திருக்கிறேன்! ஒழிக்கவே புறப்பட்டிருக்கிறேன்!
"இந்தச் சிறுவனுக்கு இந்தக் கணமே விடுதலை கொடு. அத்துடன் அவன் வேலை செய்ததற்கான ஊதியத்தைக் கணக்குப் பண்ணிக் கொடு. அவனை அடித்த ஆணவத்துக்கு ஈடாக அவனுக்கு வணக்கம் செலுத்தி ஐம்பது வெள்ளி கொடுத்து அனுப்பு” என்றான்.
'நீ யார், இதையெல்லாம் கேட்க?' என்று அவன் மீட்டும் சீறினான். ஆனால் அடி, உதை, குத்து ஆகிய பாடங்கள் அவனுக்கு மீண்டும் அறிவு புகட்டின. அவன் கூறியபடி செய்ய ஒத்துக் கொண்டான்.
66
இச்சமயம் இளைஞன் பாரத வீரன் காலடியில் விழுந்தான். ‘கண்கண்ட கற்கியே, கலியுகராமனே! எதிர்பாராது வந்து உதவிய உங்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்.ஆனால் இவனை நம்பி என்னை விட்டு விட்டுச் செல்லாதீர்கள். இவன் வாக்குறுதிகளுக்கு விலையில்லை. இவன் ஒரு அரக்கன். மனிதவடிவெடுத்து என்னை வதைக்கிறான்; உங்களுக்கு அஞ்சிப் பணிகிறான். நீங்கள் போனவுடன், வட்டியும் முதலுமாக என்னைக் கொடுமைப்படுத்துவான்” என்றான்.