உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் - 39

பாரத வீரன் ஒரு கிளைப் பாதையிலே வந்துகொண்டிருந் தான். முன்னே செல்பவர்கள் இந்தப் பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டு போகிறார்கள் என்று அவன் உடனே ஊகித்தான். காட்டான் அவர்களுக்கு உடந்தையான ஆளாயிருக்க வேண்டுமென்று மதித்தான். பட்டி மந்திரியிடம் எதுவும் கூறவில்லை. கோவேறு கழுதையை நேரே குதிரை மீதிருந்தவர்களை நோக்கிச் செலுத்தினான்.

"அடே, தடிப்பயல்களா! பேசாது அந்தப் பெண்ணை விட்டு விட்டுப் போகிறீர்களா? அல்லது உதை வாங்குகிறீர்களா?’ என்று அதட்டினான்.

அவர்கள் திடுக்கிட்டனர்! “ஏது பெண்? எங்களுக்கும் இந்த வண்டிக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. ஆனால் நீ யார்? எங்களை அதட்ட உனக்கு என்ன உரிமை?" என்று கேட்டார்கள்.

காட்டான் இப்போது கூச்சலிட்டுப் பேசினான். “அவன் திருடன் போலிருக்கிறது. ஐயா! நீங்கள் எங்களை விட்டு விட்டுப் போகவேண்டாம்” என்றான்.

பாரத வீரனுக்குக் கடுஞ் சீற்றம் எழுந்தது. காட்டான் இக்காரியத்துக்கு உடந்தை என்ற எண்ணமும் வலுவடைந்தது. அவன் ஈட்டி திடீரென்று பாய்ந்தது. குதிரைச் செல்வர்களுள் ஒருவன் கீழே விழுந்து “ஐயோ” என்று அலறினான். இரண்டு குரலுடன் அவன் ஆவிபோய்விட்டது. அடுத்தவன் அவன் உடலையும் குதிரையையும் விட்டு விட்டு, தன் குதிரையுடன் தாவி ஓடினான்.ஆனால் காட்டான் தன் கையிலுள்ள கம்பைப் பாரத வீரன்மீது ஓங்கி வீசினான். அது தலையணியையும் உடைத்துத் தலையையும் காயப்படுத்திற்று. குதிரை முகம் மட்டுமே முகத்தின் முன் தொங்கிற்று.

நோயும் சீற்றமும் பாரத வீரனையும் காட்டாளாக்கிற்று. அவன் கோவேறு கழுதையிலிருந்து இறங்கிக் காட்டானை நையப்புடைத்தான். ஆனால் காட்டான் வண்டிக்குள்ளிருந்த ஒரு திண்டை இழுத்தான் அதையே கேடயமாக வைத்துக்கொண்டு, அடியைத் தாங்கிக்கொண்டான். முழுவலிமையுடன் பாரத வீ ரனை உதைத்துத் தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்து குத்துகள் விட்டான்.