உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

213

இவர்கள் முன் காவலர் தலைவன் வீறுடன் குதிரை மீது சென்றான்.

"இவர்களை எதற்காக இப்படிக் கட்டிச் செல்கிறீர்கள்?” என்று பாரத வீரன் தலைவனிடம் கேட்டான்.

'அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்' என்று அவன் இறுமாப்புடன் பதிலளித்தான்.

பாரத வீரன் ஒவ்வொருவரிடமும் “உம்மை எதற்காகக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்” என்று கேட்டான்.

வறுமையால் திருடியதாக ஒருவர் இருவர் கூறினர். குடும்பத் துன்பங்களால் வெறுப்படைந்து, கொலைகொள்ளை நடத்தியதாகச் சிலர் கூறினர். ஆனால் கடைசிக் கைதி பேச மறுத்தான். பலதடவை கேட்டபின், பாரத வீரனை உறுத்துப் பார்த்தான். அவன் கண்கள் ஒளிகுன்றியிருந்தன. ஆனால் அது பார்க்கக் கோரமாய் இருந்தது. திடீரென அவன் வீறிட்டுக்

கூவினான்.

"கொள்ளையடிப்பதில் நான் ஒரு சிறு தவறு செய்து விட் ட்டேன். ன். என்னை விடத் திறமையான கொள்ளைக்காரர்கள் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். நான் விடுதலைபெறும் நாளை எதிர்பார்த்துக் கடுவேலை செய்கிறேன். நீ அதைப் பார்த்துக் களிக்கவந்தாயா? இங்கு உனக்கு என்ன வேலை. பேசாமல் போ. இல்லையென்றால் உன் மண்டையை உடைத்து விடுவேன்” என்று அவன் கையைச் சங்கிலியுடன் ஓங்கினான்.

பாரத வீரன் அஞ்சவில்லை, சிரித்தான். “பாவம் உன் கோபத்தை எங்கே காட்டுவதென்று தெரியவில்லை. நான் கேலிசெய்ய வரவில்லை. விடுவிக்க வந்திருக்கிறேன்” என்றான்.

காவலர் சீறினர். கைதி விழித்தான். ஆனால் கண்மூடித் திறக்குமுன் பாரத வீரன் வாளால் கைதியின் சங்கிலியை உடைத்தான். பின் ஈட்டியைச் சுழற்றிக் காவலர்களை ஒவ்வொருவராக வீழ்த்தினான். தலைவன் குதிரையைப் பின்புறமாகத் திருப்ப முயன்றான். பாரத வீரன் பின்னிருந்தே குதிரைமீது ஈட்டியை வீசினான். விலாவில் தைத்த ஈட்டியுடன் குதிரை தலைவனையும் உடன் கொண்டு பாய்ந்தோடிற்று.