உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

66

219

'இப்போது கூட, உங்களால் முடிந்தால், எனக்கு ஒன்றிரண்டு துட்டுக் கொடுத்து உதவுங்கள்” என்றான்.

பாரத வீரன் செலவுக்காக முந்நூறு வராகன் கொண்டு வந்திருந்தான். அது பட்டிமந்திரியின் கையிலேயே இருந்தது. அத்துடன் இறந்த குதிரைச் செல்வன் பணமான ஐம்பது வெள்ளியும் அவனிடமே இருந்தது. 'அந்த ஐம்பது வெள்ளியையும் இளைஞனுக்கே கொடுத்து விட எண்ணுகிறேன். உங்கள் இசைவு கோருகிறேன்" என்று அவன் பாரத வீரனிடம்

கேட்டான்.

66

"உன் உள்ளம் இவ்வளவு கனிவுடையதாயிருப்பது கண்டு மகிழ்கிறேன். அப்படியே செய்' என்றான் பாரத வீரன்.

இளைஞன் அவர்கள் இருவரையும் விழுந்து விழுந்து

வணங்கினான்.

பாரத வீரன் உள்ளத்தை இந்நிகழ்ச்சி பெரிதும் சுட்டது. புதிய போர் எதிலாவது ஈடுபட்டு, இதை மறக்க அவன் துடித்தான். அதற்கேற்ப, பட்டிமந்திரியின் பேச்சு அவனை அத்துறையில் தூண்டிற்று.

"அண்ணலே! இந்தக் காடு முழுவதும் கரிசல் நிறமாக இருக்கிறதே! மரங்களே மிகுதி இல்லாமல் தூளும் செத்தையும் அடமர்ந்திருக்கிறதே! இதற்குக் காரணமென்ன? இங்கும் ஏதாவது அரக்கர் செயல் உண்டா?" என்று அவன் தொடங்கினான்.

பாரத வீரன் முகத்தில் துயர மேகங்கள் சற்றே அகன்றன.

66

'ஆம், பட்டி, தாடகையும் கரன் தூஷணர் என்ற அவன் உறவினரும் வாழ்ந்த இடம் இது. அதோ புல் பூண்டற்றுக் கிடக்கும் பாறைகள் தாடகையின் உடல் பகுதிகளே. கரன் சென்ற இடமெல்லாம் கரிசல் காடாயிருக்கிறது. தூஷணன் இருந்த இடமெல்லாம் தூள் அடர்ந்து கிடக்கிறது, என் அவதாரத்துடன், கரனும் தூஷணனும் இதே இடத்தில் அவதாரமெடுத்திருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நான் அவர்களை எதிர்பார்க்கலாம்' என்றான்.

பட்டி மந்திரியின் கழுதை அச்சமயம் பாரத வீரன் கோவேறு கழுதைக்கு மிகவும் பின்னடைந்திருந்தது. அரக்கர்