உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

[221

பற்றிய கவலை எழுந்தது. ஆட்டு மந்தையை அவசரத்தில் தலைவன் தூஷணன் படை என்று கருதிவிட்டாரே! என்ன நேருமோ என்று கவலைப்பட்டான். இடையே வந்த அச்சத்தை அகற்றிவிட்டு, அவனும் கழுதைமீதேறிப் பாரத வீரனை நோக்கி விரைந்து சென்றான். அவனை எட்டிப்பிடிக்கப் பல கண நேரம் ஆயிற்று. ஆயினும் எட்டியும் பயனில்லை. பாரத வீரன் அதற்குள் போர் தொடுக்க ஆயத்தமாய் விட்டான்.

"ஐயனே! இது தூஷணன் படையல்ல. வெறும் ஆட்டு மந்தை. முன்போல இதைத் தாக்கி இடருக்கு வழி வகுக்க வேண்டாம். திரும்பி விடுங்கள்” என்றான்.

பாரத வீரன் சிரித்தான். “இந்தக் காரியங்களில் உன் மூளையை நம்பாதே பட்டி, தூஷணன் மாயம் வல்லவன். உன்னை ஏமாற்றவே, உன் கண்ணுக்கு அவன் தன் படையை ஆட்டு மந்தையாக்கிக் காட்டுகிறான். நான் பாரத இராமாயண புராணங்களை நன்றாக வாசிக்காதவனாயிருந்திருந்தால் என் கண்ணுக்கும் இதே மாயத் தோற்றம் ஏற்பட்டிருக்கும். ஆகவே உன்னிடம் தவறு இல்லை. நீ நான் சொல்வதை நம்பு. போய் மேட்டிலேயே காத்துக்கொண்டிரு. நான் விரைந்து வெற்றியுடன் வருகிறேன்” என்றான்.

பட்டி மந்திரி வேறு வழியில்லாமல் திரும்பிச் சென்றான்.

கோவேறு கழுதையின் பாய்ச்சலால் ஆட்டு மந்தையின் முன்னணி சின்னாபின்னப்பட்டது. குட்டிகள் குளம்பு பட்டு நைந்தன. ஆடுகள் ஒன்றன் மீது ஒன்று மோதின. பல ஆடுகள் அவன் ஈட்டிக்குத்துக்கு ஆளாயின. பின்னே நெடுந்தொலைவில் வந்த ஆயர்கள் இதை முதலில் கவனிக்கவில்லை. கவனிக்குமுன் முன்னணி ஒரே இறைச்சிக் காடாயிற்று.

பாரத வீரன் ஆயர்களைப் படைத் தலைவர்கள் என்றே கருதினான். ஆடுகளின் இரைச்சல் தாண்டி அவர்கள் கூக்குர லிட்ட சமயம் உண்மை நிலை கிட்டத்தட்ட அப்படித்தா னிருந்தது. அவர்களில் சிலர் அவனை வைதனர். சிலர் 'கொல்லாதே விடு, விடு' என்று கெஞ்சினர். சிலர் அவனை நோக்கிக் கல்லையும் கம்பையும் வீசி எறிந்தனர். ஒன்று இரண்டு பேர் அவனைப் பிடித்து கட்டி நையப் புடைக்கும் எண்ணத்துடன்