உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232 ||.

அப்பாத்துரையம் - 39

விழாக் கொண்டாட்டத்துக்காகவே காவலுடன் அனுப்பி யிருந்தார். சிங்கத்தை ஓட்டிய வண்டியோட்டி தெரிவித்த செய்தியை அவர் முதலில் நம்பவில்லை. அத்துடன் நம்பிய போதும், அதை அவர் பொருட்படுத்த வில்லை. சிங்கம் கூண்டுக்குள்ளே கட்டப்பட்டிருந்த செய்தியை அவர் அறிந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சியின் முழுவர்ணனை கேட்டபின், அவர் கருத்து மாறிற்று. சிங்கம் வெளிவராததற்கும், பாரத வீரன் வீரத்துக்கும் முரண்பாடு எதுவுமில்லை என்று அவர் கண்டார். ஆகவே சிங்கத்தைப் பாரத வீரன் எதிர்த்து நின்ற காட்சியை அவர் தீட்டுவித்தார். அவனை நேரில் காணும் ஆர்வம் உடையவராக இருந்தார்.

தம் ஒற்றர்கள் மூலம் அவர் பாரத வீரன், பட்டி மந்திரி ஆகிய இருவரின் செயல்களையும் பண்புகளையும் நன்கு உசாவியறிந்தார். கவந்தன் போர், கரதூஷணர் போர், பொன்முடி வெற்றி முதலியவைகளையெல்லாம் பலர் வாய் மொழியால் அவர் அறிந்தார். இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு கற்கி பாரதம் வகுக்கத்தக்க பெரும் புலவனையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் பாரத வீரன் தடத்தை உசாவிக் கொண்டு மணிப்புலவன் அவரிடம் வந்தான். பாரத வீரன் நாமாவளிகளை அவன் பல வண்ணங்களாகப் படித்துக் காட்டினான். பாரத வீரன் காவியத்தை எழுதத்தக்க பெரும் புலவன் அவனே என்று அவர் முடிவு கட்டினார்.

மணிப்புலவன் காவியம் இயற்றும் பொறுப்பை மகிழ்வுடன் ஏற்றான். ஆனால் காவியக் கதையை இனிது முடிக்கும் பொறுப்பை அவன் மாக்கோதை மீதே சுமத்தினான்.பாரத வீரன் வீரகாவியத்திற்கு, பாரத வீரன் வெற்றிகள் மட்டும் போதாது என்று அவன் கருதினான்.பட்டி மந்திரிக்கு அதில் போதிய பங்கு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் ஒரு சிற்றரசன் ஆக வேண்டும் என்ற அவன் ஆர்வமும் நிறைவேற வேண்டும். அவன் ஆட்சித்திறமும் வீரக்கதையில் ஒரு வீரமமைந்த உறுப்பாயிருக்க வேண்டும் என்று மணிப்புலவன் கருதினான்.

மாக்கோதையின் கலையார்ந்த நகைச்சுவையை இது தூண்டிற்று. அவர் இதற்கு இசைந்தார். இதற்கான திட்டமும்