உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

239

டி

இந்த ஏற்பாடினால் அவர்கள் மீண்டும் சில நாள் அரண்மனையிலேயே தங்க வேண்டியதாயிற்று. ஆனால் பட்டி மந்திரி முன்போல அரண்மனை வாழ்வை அனுபவிக்க முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள், பறந்து வானில் செல்ல வேண்டுமே என்ற கவலை, உண்ணும் ஒவ்வொரு பிடியின் சுவையையும், பருகும் ஒவ்வொரு மடக்கின் குளிர்ச்சியையும் கெடுத்தது.

குறித்த நாளில் அரசியின் மரபுரிமைப் பகுதிக்கு எல்லோரும் சென்றனர். பறக்கும் குதிரையை அவ்வூரார் ‘நம்பிரான்' என்று அழைத்தனர். அது குதிரையைவிடப் பெரிதா யிருந்தது. ஆனால் குதிரையைவிட உயிர்த் துடிப்புடையதாகத் தீட்டப்பட்டிருந்தது. அது ஒரு சுழலும் அடுக்குச் சட்டத்தில் ஓர் இருப்புலக்கை மீது மாட்டப்பட்டிருந்தது. கீழடுக்கில் மக்கள் தூக்கும் தண்டயங்கள் இரண்டு மூன்று நாற்றிசையிலும் இருந்தன. இதை மக்கள் முழந்தாளளவாகத் தொங்கும் கையில் தூக்கிக் கொண்டு சுற்றுவர். சுழற்சி வேகமான பின், தொங்கும் கை இடுப்புயரம், நெஞ்சுயரம், தோளுயரம் என்று உயரும். வேகம் இன்னும் மிகுதியான பின் கைகள் தலைக்கு மேல் முழு நீளமாக உயரும்.

அடுக்குச் சட்டத்தின் அடி அடுக்கிலும் ஒவ்வொரு மேலடுக்கிலும் தனித் தனி சுழல் பொறிகள் இருந்தன. அவற்றை இயக்கும் ஆட்களும் இருந்தனர். ஒவ்வொரு அடுக்கின் பொறியும் மேலடுக்கைச் சுழற்றிற்று. இங்ஙனம் சுழற்றிச் சட்டத்தின் மேல் சுழற்சிச் சட்டமாகச் சுழன்று கொண்டே தொங்குகை உயரத்திலிருந்து தூக்குகை உயரமாக விரைந்து சுழன்று உயரும் குதிரை முற்றிலும் பறப்பது போலவே தோற்றமளிக்கும்.

குதிரை தலையுச்சியில் ஒரு திருகு முனை இருந்தது. இதைக் குதிரைமேலிருப்பவர் திருப்பினால், குதிரை சட்டத்தை விட்டே பறந்து முகில்மேல் செல்லும் என்று பாரத வீரனிடம் கூறப்பட்டது. இவ்வண்ணம் பறப்பதற்குரிய நேரத்தை ஒரு குழலூதி அறிவிப்பதாகவும் அவனுக்குக் கூறப்பட்டது.

பாரத வீரன் ‘நம்பிரான்' முதுகின்மேலும், பட்டிமந்திரி அவன் பின்னும் ஏற்றப்பட்டனர். குதிரையுடன் இருவர் உடலும் மிக உறுதியாகப் பிணிக்கப்பட்டன. பின் இருவர் கண்களும் மிக