உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

243

திகில் கொண்டான். துயரமும் திகிலும் சேர்ந்து அவன் யாவரும் இரங்கும் வண்ணம் கதறியழத் தொடங்கினான்.

இச்சமயம் வாகைப் போர் நாடகத்தின் இறுதிக் காட்சி நடைபெற்றது. மக்கள்கூட எதிர்பாராத தனி நிகழ்ச்சி அது. படாரெனப் பறக்கும் குதிரை வெடிப்பது போன்றிருந்தது. பல இடிகள் ஒன்றாய் முழங்கினதுபோல மண்ணும் விண்ணும் அதிர்ந்தது. குதிரை இத்தடவை உண்மையிலேயே வானத்தி லெழுந்து தூவிற்று.

பாரத வீரனும் பட்டி மந்திரியும்

நம்பிரான்

ஆடற்களத்திலிருந்து அரைக் கல் தொலைவிலுள்ள ஒரு கயிற்று வலையில் போய் விழுந்தனர். தொய்யும் இழையால் வலை செய்யப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் உடலுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. ஆனால் அதிர்ச்சி, அச்சம் திகில் ஆகியவை பட்டி மந்திரியின் உயிரைக் குற்றுயிராக்கின. உணர்வற்ற நிலையில் குதிரை மீது சாய்ந்திருந்த பாரத வீரன், வெடி அதிர்ச்சியால் உணர்வு பெற்றான். அடுத்த கணம் விழுந்த அதிர்ச்சியால் அவன் மீட்டும் உணர்விழந்தான்.

கடைசி நிகழ்ச்சிக்குரிய தனித்திட்டம் யாருமறியாமல் அரண்மனை முதல்வன் செய்தது. அவன் குதிரையின் உடலுக்குள் மிக ஆற்றல் வாய்ந்த வாணவெடிகள் வைத்திருந் தான். வால் வழியாக அது சரியான நேரத்தில் தீ வைக்கப்பட்டது. டி அரவமும் அதன் விளைவும் இந்த வாண வெடிகளின் செயல்களே. ஆனால் முன்னெச்சரிக்கையாக விழும் முழுவதும் அரண்மனை முதல்வன் தொய்வுடைய இழைகளால் வலையிட்டுக் காப்புச் செய்திருந்தான்.

L

அரன், அரசி, மக்கள் ஆகியவர்களுக்குக் கூட இறுதி நிகழ்ச்சி அச்சத்தையும் கலக்கத்தையும் ஊட்டிற்று. ஆனால் முதல்வன் இடர் எதுவுமில்லை என்று அவர்கள் அச்சம் அமைத்தான். திட்டத்தை அவர் விளக்கிய பின்தான் அவர்கள் அனைவரும் அடக்கிய வேகமெல்லாம் சேர்த்து விலாப் புடைக்கச் சிரித்தார்கள்.

அதிர்ச்சியிலிருந்து வீரனும் பாங்கனும் மீளப் பல மணி நேரம் ஆயின. பாரத வீரன் போராட்டத்தில் மிகவும் சோர்ந்து