உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

253

பட்டி பெண்ணை நோக்கிப் பேசினான்: "நங்கையே! இப்போது இதன் தீர்ப்பு உன்னையே பொறுத்திருக்கிறது. நான் சொல்கிறபடி செய்தால் உன் விருப்பமும் நிறைவேறும். தாய் தந்தையர் மனமும் குளிரும். அதன்படி செய்வாயா?” என்றான்.

66

என் விருப்பம் நிறைவேறினால் எதுவும் செய்கிறேன்” என்றாள் நங்கை.

மன்னன் அவள் காதலனை நோக்கினான். "அன்பனே, நீ அவளைக் காப்பாற்றினாய். அவள் உள்ளத்தை உனதாக்கினாய். அவள் தாய் தந்தையர் விருப்பத்தை நீ மதிக்க வேண்டுமல்லவா?” என்றான்.

66

“என் காதலியைப் பெறுவதனால், அதற்காக எதுவும் செய்யத் தடையில்லை" என்றான் அவன்.

மன்னன் தீர்ப்புக் கூறினான்.

"பெண் அவள் காதலனை மணந்து கொள்ளலாம். ஆனால் மணக்குமுன் தாயின் அண்ணன் மகன் திருமணத்தை அவள் செய்து வைக்க வேண்டும். அதற்கான செலவை அவள் தேடிப் பெறவேண்டும். அத்துடன் தந்தையின் உடன் பிறந்தாள் மகன் திருமணத்தை அவள் காதலன் முடிக்க வேண்டும். அதற்கான செலவை அவன் தேடிப் பெற வேண்டும். இந்த இரண்டும் முடிந்தபின் தாய் தந்தையர் அவர்கள் மணத்தைத் தம் பொறுப்பிலேயே முடிக்க வேண்டும்” என்று அவன் முடிவு தெரிவித்தான்.

மன்னர் முடிவு உடனடியாகவே நிறைவேறிற்று. ஏனென்றால் தாயின் மருமகனும் தந்தையின் மருமகனும் காதலனின் தங்கையரையே மணக்க ஒப்புக் கொண்டனர். எல்லாத் திருமணங்களும் ஒருங்கே நிறைவேறின. மன்னனே அனைத்தையும் உடனிருந்து நடத்தி வைத்தான்.

மன்னன் ஆட்சித்திறமை கண்ட அமைச்சர்கள் அவன் போர்த்திறமும் காண அவாவினர்.

நாள்தோறும் மன்னன் அலுவல்கள் காலையில் பத்து நாழிகையையும் மாலையில் பத்து நாழிகையையும் கொள்ளை கொண்டன. ஊணுடை முதலிய நாள்முறை வேலைகளும்,