உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

261

என்றார். இறுதியில் சமரசத் திட்டமே உருவாயிற்று. முதலில் கோமாறன் தேர்ச்சி பெற்றுச் சென்று முயலலாம். அதில் வெற்றி கிட்டாவிட்டால், பின் நன்னயப்பட்டர் தக்க சூழ்ச்சி முறையைக் கையாளலாம். இதுவே அவர்கள் சமரசத் திட்டம்.

கோமாறன் ஆறு மாதம் மற்போர், வில்வித்தை, பயின்றான். பின் பாரத வீரனைப்போலவே கவசம், தலையணி ஆகியவை அணிந்தான். ஆனால் குதிரைத் தலைக்கு பதிலாக அவன் சிங்கமும் அணிந்தான். கவசத்தின் மீது வேங்கையின் வண்ணவரிகள் தீட்டப்பட்டிருந்தன. அத்துடன் சின்னஞ்சிறு கண்ணாடித் துண்டுகள் செய்து, அவற்றில் அவன் பாதரசம் பூசினன். அவை எண்ணற்ற நுண்ணிய முகக்கண்ணாடிகளாயின. அவற்றை அவன் புலியின் வண்ண வரிகளிடையே ஒட்டினான். இந்நிலையில் அவன் உருவம் அச்சமிக்கதாயிருந்தது.

பாரத வீரனும் பட்டி மந்திரியும் வழியில் ஒரு மரத்தடியில் தங்கியிருந்தனர். அதே இடத்தில் கோமாறனும் தங்கினான். ஆனால் அவர்கள் சந்தித்த நேரம் இருட்டாயிருந்தது. வீரர் என்ற முறையில் அவர்கள் அளவளாவிப் பேசினர். கோமாறன் பாங்கனாக ஒரு முரட்டு வேலையாள் வந்திருந்தான். அவன் பட்டி மந்திரியுடன் அளவளாவ விரும்பினான். ஆனால் இருட்டிலும் அவன் கைப்பிடி கண்டு பட்டி அவனிடம் அச்சங்கொண்டான். இருந்த போதிலும் புதியபாங்கன் பட்டியை எளிதில் தன் இனிய தின்பண்டங்களால் வசப்படுத்தினான்.

கோமாறன் பேச்சிடையே தன் வெற்றிகளைப் பற்றிப் புகழ்ந்தான். தன் காலத்து வீரர்கள் அனைவரையும் தான் வென்றுவிட்டதாக அவன் வீம்படித்தான்.பாரத வீரன் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ‘பாரத வீரன் என்று ஒரு வீரன் இருக்கிறான்' என்று தொடங்கித் தன் வீரக் கதையைத் தானே கூறினான்.

கோமாறன் சிரித்தான். “உனக்குப் பாரத வீரன் சேதி எட்டியிருக்கிறது. அவனை வென்றவன் சேதி எட்டவில்லை. என் பெயர் சிங்கமுகாசுரன். என்னைக் கண்டவுடன் பாரத வீரன் அஞ்சி ஓடப்பார்த்தான். நானா விடுகிறவன்! நான் அவனை முறியடித்துப் 'பாரத வீரன்' முதலிய அவன் விருதுகளை

,