உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

அப்பாத்துரையம் - 39

உங்களிடம் நானும் என் தோழர்களும் ஒரு பெரிய மன்னிப்புப் பெற வேண்டும். விளையாட்டை வினையாக்கி, நாங்கள் உங்களுக்கு எல்லையற்ற தொல்லை தந்துவிட்டோம். ஆனால் பத்தரைமாற்றுத் தங்கம் தீயிலிடுவதால் எரிந்து போவதில்லை. உங்கள் உண்மைப் பெருமை எங்கள் பிழையாலும் நன்கு விளங்கிவிட்டது. ஆனால் நாங்கள் வெட்கப்படுகிறோம். வருந்துகிறோம். எங்களை மன்னித்தால், வாழ்நாள் முழுதும் நன்றியறிதலுடன் உங்களுக்குத் தொண்டு செய்வோம்” என்றான்.

66

'அன்பனே! நீயும் தோழர்களும் என்ன பிழைகளும் செய்பவர்களல்ல, செய்தாலும் நான்மன்னிக்க ஒரு சிறிதும் தடை இராது. ஆகவே சொல்லுங்கள். சென்ற ஒரு வாரத்தில் நான் எவ்வளவோ மாறிவிட்டேன். உடல்தான் தளர்ந்திருக்கிறது. ஆனால் மூளை தெளிவாய் இருக்கிறது - ஆகவே பிழையறிந்து, நான் உங்கள் கவலையை மாற்றக்கூடும்" என்றான்.

66

'அண்ணலே! பிழைகளைக் கூற இன்னும் ஒரே ஒரு தயக்கம்தான். தங்கள் உடல் நிலையில், தங்கள் மன அதிர்ச்சி எதுவும் கேடுதந்தால் நாங்கள் இன்னும் வருந்துவோம். இதுவரை பிழைசெய்த எங்களுக்கு இன்னும் நீண்டநாள் உங்கள் நல்வாழ்வு ஆறுதல் தர வேண்டும். ஆகவே எங்கள் பிழைக்காக நீங்கள் அதிர்ச்சி பெறாமல் இருக்கக் கோருகிறேன்.

“நீங்கள் உண்மையிலேயே ஒப்பற்ற வீரர் என்பதை நாங்கள் முன்பு அறியவில்லை. இப்போது அறிந்தோம். அத்துடன் உங்கள் குணம் பொன்னானது. வீரத்தைவிட அது எவ்வளவோ விலைமதிக்க முடியாதது. ஆனால் இதையும் நாங்கள் உணரவில்லை. உங்கள் கற்பனை ஆர்வத்தை தூண்டி விட்டு, நாடகம் நடித்தோம். உங்கள் நம்பிக்கையைக் கண்டு மேலும் மேலும் ஏமாற்றினோம்.றி உங்கள் வீர உலாவின் வீரம் உங்களுடையது. ஆனால் எங்கள் பொய் நாடகத்தால் அதில் பல இன்னல்கள் உங்களுக்கு ஏற்பட்டது. இதை நீங்கள் உணர்ந்து கொண்டு, உலாவை மறந்து, நடிப்புக்கும் மன்னிப்புத் தர வேண்டும்” என்றான்.

நோயுற்றபின் முதல் தடவையாக பாரத வீரன் சற்று

எழுந்தான்.