உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. பண்பும் பயனும்

இயற்கையின் செல்வங்களுள் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது? என்று அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. ஏனெனில் வெளிப்பகட்டான முத்து, மணி முதலியவற்றைவிடத்தோற்றத்தில் இழிந்த இரும்பும் நிலக்கரியும் இன்று நாகரிக உலகிற்கு இன்றியமையாத தேவைகள் ஆய்விட்டன. ஆயினும் எல்லாப் பண்புகளையும் ஒப்பு நோக்கினால் இயற்கையன்னையின் தலை சிறந்த செல்வம் பொன்னே என்பதில் ஐயமில்லை.

காலப்போக்காலும் ஆழ்ந்த ஆராய்ச்சியாலும் பொன்னைப் பற்றிய பல பழைய கருத்துக்கள் மாறியும் திருந்தியும் உறுதிப் பட்டும் வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொன்னே திண்பொருள் களுள் எடை மிகுதியிலும் விலை உயர்விலும் முதன்மையுடைய தாகக் கருதப்பட்டது. இன்னும் அவ்விரு வகையிலும் பொன் உயர்நிலையுடையதாகவே இருந்து வருகிறது. ஆனால் இன்று அது முதன்மையுடையது என்று கூறிவிடுவது முற்றிலும் சரியன்று. பொன்னைவிடத் திண்பொன் (Iridium) மின்பொன் (Platinum) ஆகிய திண்பொருள்கள் (Metals) எடை மிகுந்தவை. மின் பொன், ஒண்பொன் (Radium) ஆகியவை பொன்னினும் விலை மிகுந்தவை. ஆயினும் இம் மூன்று திண்பொருள்களும் அருகியே வழங்குகின்றன. எனவே இன்று பெருவழக்கான திண்பொருள் களுள் பண்டைக்காலத்தைப் போல இன்னும் பொன்னின்நிலை முதன்மையுடையதாகவே இருக்கிறது.

கீழ்வரும் அட்டவணை திண்பொருள்களினிடையே பொன்னின் எடை நிலையை நன்கு காட்டும். அதிற்காணும் எண்கள் திண்பொருள்களின் ஒப்ப எடை எண்கள் (specific gravity); அதாவது சரி அளவு நீருடன் ஒப்பிட்டு அவற்றின் எடை மிகுதியை நீரினைப்போல் இத்தனை மடங்கு என்று காட்டும் எண்கள்.