உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

13

தங்கமும் வெள்ளியும் பிற எல்லாத் திண்பொருள் களையும்விட எளிதில் தகடாக அடிக்கவும் கம்பியாக நீட்டவும் இடம் தருபவை. நுண்ணிய கலைப்பண்பு மிக்க வேலைப் பாடுகள் இரு திண்பொருள்களிலும் வியத்தகு முறையில் செய்தல் கூடும். நம் நாட்டுக் கம்மியர் பண்டுதொட்டு ன்றளவும் இதில் தலைசிறந்து விளங்குகின்றனர்.

அன்னத்தின் தூவிகள்போல் மெல்லிய தகடுகளாக அல்லது தாள்களாகத் தங்கத்தை அடிக்க முடியும். ஒரு அவுன்சுத் தங்கத்தைத் தாள்களினிடையில் வைத்து அடித்து அடித்து ஒன்றேகால் அங்குலச் சதுர அளவுள்ள 2500 தகடுகள்வரை அடிக்கமுடியுமாம். இவ்வாறே ஒரு கிராம் தங்கத்தைக் கிட்டத்தட்ட 2 கல் தொலையளவு நீளமுள்ள கம்பியாக நீட்டக்கூடுமென்கின்றனர். இக்கம்பி மிக மெல்லியதாய் நூறாயிரத்தி லொருபங்கு மில்லிமீட்டர் அதாவது அங்குலத்தில் இருபத்தைந்து நூறாயிரத்தில் ஒருபங்கு திண்ணமுடையதா யிருக்கும். தங்கக் கம்பிகளை இத்தகைய மெல்லிய நூல்களாக்கி அதினின்று பொன்னாடைகளும், பொன் கரைகளிட்ட ஆடைகளும் செய்கின்றனர்.

பொன் பாரன் ஹைட் வெப்ப நிலையளவை 1947 பாகையில் (நூற்றளவை 1063) உருகுநிலை யெய்தும். நூற்றளவை 1250-இல் விரைந்து உருகும். தங்கம் ஆவியாவதற்கு 25000° நூற்றளவை (45032° பாரன் ஹைட்) வெப்பநிலை வேண்டும். தங்கத்தின் உருகு நிலையையும் கொதி நிலையையும் பிற திண்பொருள்களுடனும் நீரின் நிலைகளுடனும் கீழே வரும் அட்டவணையில் ஒப்பிட்டுக்

காண்க.

உருகு நிலை

கொதிநிலை

(பாரன்ஹைட்)

27860

QUITGOT 45,032

இரும்பு

(Cast)

(25000° C)

இரும்பு 4,393

(2450°C)

செம்பு

1996

பாதரசம்

பொன்

1947

644