உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

31

‘இராந்து’ப் பாறையும் நிலத்தில் மிகவும் ஆழ்ந்து விரிந்த முதற் பாறைகளைச் சேர்ந்தவையாதலால் நிலவரமான பயன் தரவல்லவை.

உலகின் பொன் தேட்ட நிலையை ஆழ்ந்து ஆய்ந்தவர், 'பொன் வேர்கள்' என்னும் பொற்கலவைப் பாறைகள் நிலத்தினுள் ஒரே படியாக நரம்புபோல் செல்லுபவை என்றும், அவற்றின் போக்கறிந்தபின் இன்னின்ன இடங்களில் இத் தங்க வேர்களைக் காணலாம் எனத் திட்டப்படுத்துவது எளிதென்றும் கூறுகின்றனர். இதனைக் கீழேயுள்ள படம் இனிது விளக்கும். ஆ.க. இரண்டிலும் அ. என்ற இடத்தில் தற்செயலாகப் பொன்கலந்த மண்ணை ஒருவன் கண்டான் என்று வைத்துக் கொள்வோம். ஆ என்ற இடத்தில் சற்றுத் தொலை ஆழத்திலும் இ என்னுமிடத்தில் இன்னும் ஆழத்திலும் அதே வகை மண்ணைக் காண்கிறான், எனவே பொன் கிடக்கை வேர்போல் நிலத்தினுள்ளாக அ, என்ற நேர்க்கோடாகக் கிடக்கின்றது என்று அவன் உய்த்தறியலாம் அல்லவா? அதன்பின் அதே சாய்வில் அதற்கு நேரான கோட்டில் அப் பொன் பாறை இருக்கும் என அவன் எண்ணலாம். பிறர் வியக்கும் வண்ணம். இன்ன இடத்தில் இவ்வளவு ஆழத்தில் பொன் அகப்படும் எனவும் அவன் உறுதியாகக் கூறமுடியும்.

அதுமட்டுமன்று. நிலத்தின் பரப்பில் குறுக்கிட ஆறு முதலிய ஏதேனும் ஒன்றின் செயலால் பொன் வெளிக்கண்ட தெனக் கொண்டு தேடினால் அதனுக்கெதிரான பிறிதொரு சாய்வில் அவன் அதனை மீண்டும் கண்டு க. முதல் ங. வரை அதனைப் பின்பற்றிச் செல்லவோ கா.கி. முதலிய டங்களில் சுரங்கக் குழிகள் இறக்கவோ செய்தல் ஆகும்.

உலகின் தோற்றத்தைப் பற்றி ஆராய்பவர் பிற பொருள்களுக் கெல்லாம் படிப்படியாகத் தோற்றுவாய் அல்லது தாயகங்கள் கண்டு இறுதித் தாயகமான “முதற்பொருள்" வரைச் செல்வர். அதன் ‘தாயகம்' யாதெனும் கேள்வி பின்னும் எழத்தக்கதே. மறுமொழிகிட்டும் வரை இங்ஙனம் கேட்டு மறுமொழி காண்பதும், காணாவிடத்து உய்த்துணர்வதும் புனைந்துணர்வதும் இயற்கையே யல்லவா? அதுபோல, ஆற்றுமணலும் மணிக் கற்களும் கலவைக் கற்களும் பாறைகளிலிருந்தும் பாறைகள் நிலத்தின் கருவிடங்களான தாய்ப்பாறைகளிலிருந்தும் தோன்றிய